வரும் பொதுத்தேர்தலில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் தபால்பெட்டி சின்னத்தில் போட்டியிடும் அங்கஜன் இராமநாதன், “நானே உண்மையான தமிழ்த்தேசியவாதி” என தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தங்களுக்குள் உட்பூசல்கள் செய்து நமது வாய்ப்புக்களை தாரை வார்த்துக்கொடுத்து, தமிழ் மக்களை கல்வியில் நலிவுறச் செய்து பொருளாதாரத்தில் வீழ்ச்சியடையச் செய்து தமிழர்களை புலம்பெயர் தமிழராக்கி விட்டு, மக்களுக்கென்று எதுவும் செய்யாமல் இனியும் எதுவும் செய்வதற்கு எந்த திட்டமும் இல்லாமல் சக தமிழர்களை உணர்வுரீதியாகவே தாக்கி தம் சுயலாபத்திற்கு பயன்படுத்துபவர்களா உண்மையான தமிழ்த்தேசியவாதிகள்?
தமிழ் மக்களின் இருப்பைத் தக்கவைத்து, மக்களின் நலன்களைக் காக்கும், அவர்களை பொருளாதாரத்தில் வலுப்படுத்தும், கல்வியில் முன்னேற்றம் பெறச் செய்யும் முயற்சியில் ஒருங்கிணைந்து செயற்பட்டு, தமிழ் மக்களின் வாழ்க்கையை மேம்மடுத்துபவரா உண்மையான தமிழ்த்தேசியவாதி?
நான் என் தமிழ் மக்களின் இருப்பை தக்கவைத்து, அவர்கள் தேவைகளை நிறைவேற்றி, அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்துவதை என் முழுநோக்காய் கொண்டு செயற்படுகிறேன். வெற்றுக்கூச்சலிடவில்லை. அதனால்தான் சொல்கிறேன், நான் தான் உண்மையான தமிழ்த்தேசியவாதி. என அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.