கடும் மழை காரணமாக யாழ் மாவட்டத்தில் 221 குடும்பங்கள் பாதிப்பு

கடந்த சில தினங்களாக யாழ் மாவட்டத்தில் பெய்துவரும் மழையால் 221 குடும்பங்களைச் சேர்ந்த 733பேர் பாதிப்படைந்துள்ளனர்.

வடமராட்சிப் பகுதியிலேயே அதிகம்பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவில் 174 குடும்பங்களைச் சேர்ந்த 584பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரவெட்டிப் பிரதேச செயலகப் பிரிவில் 7பேரும், மருதங்கேணிப் பிரதேச செயலகப் பிரிவில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை யாழ்ப்பாணம் பிரதேச செயலகப் பிரிவில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் சூரியராஜா தெரிவித்துள்ளார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles