யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவர் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை அல்வாய் பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதான ஐந்து பிள்ளைகளி தாய் ஒருவரே டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
