மாவீரர் தினம் அனுஷ்டித்தவர்கள், தலைவரின் பிறந்தநாள் கொண்டாடியவர்கள் தொடர்பாக விசாரனை செய்ய முயற்ச்சி

தமிழர் தேசத்தில் மாவீரர்களை நினைவுக்கூர்ந்தவர்கள் மற்றும் தலைவரின் பிறந்தநாள் கொண்டாடியவர்கள் தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவு விசாரணைகளை முன்னெடுக்கும் என இலங்கைப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் , இதன்போது தவறிழைத்தவர்கள் கைதுசெய்யப்படுவர் எனவும், இது சட்டவிரோதமான செயல் என்றும், விடுதலைப்புலிகள் அமைப்பானது தீவிரவாத அ​மைப்பென்பதோடு, அது ஒரு தடைசெய்யபட்ட அமைப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரபாகரனது உருவப்படங்களை வைத்து, அவரது புகைப்படங்களை விளம்பரமாக ஒட்டி அவருக்கு கேக் வெட்டப்பட்டுள்ளதென்றால் அது தொடர்பாகவும் விசாரணைகளை முன்னெடுக்குமாறு தெரிவித்துள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மாவீரத்தின நிகழ்வுகள் நடந்த பல இடங்களில் இலங்கை ராணுவ புலனாய்வாளர்கள்  மக்களைப் புகைப்படம் எடுத்ததும், சில இடங்களில் ராணுவத்தினர் மிரட்டும் பாணியில் செயற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles