தமிழ்க் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் விவகாரம் சர்ச்சையில் !!

நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் தேசிய பட்டியல் ஆசனம் வழங்கலில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

கிடைத்த ஒரே ஒரு தேசிய பட்டியல் ஆசனத்திற்கு கூட்டமைப்பிற்குள்ளேயே சர்ச்சைகள் எழுந்துள்ளது.

பங்காளிக் கட்சிகளான டெலோ மற்றும் புளொட்டுடன் கலந்து ஆலோசிக்காமல் தேசிய பட்டியல் ஆசனம் அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதை அக்கட்சியின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் ஊடக சந்த்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் போயுள்ளது. எனவே அந்த மாவத்திற்கு தேசிய பட்டியல் வழங்கியதில் தமக்கு எவ்வித முரண்பாடும் இல்லை. இருப்பினும் பங்காளிக் கட்சிகளான எம்முடன் இது தொடர்பாக ஆலோசிக்காமல் தன்னிச்சையாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் முடிவெடுத்தமை ஆரோக்கியமானதல்ல என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் தேசிய பட்டியல் ஆசனம் யாருக்கு வழங்குவதுதென்பது தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கே அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிய வருகிறது !! இருப்பினும் இது உறுதிப்படுத்தப்படவில்லை.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles