தேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்கான ஆகக் குறைந்த வயதெல்லையாக 15 வயது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆகக் குறைந்த வயதெல்லையாக 16 வயது காணப்பட்டது.
இதன்படி 15 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்க ஆட்பதிவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. மாணவர்கள் தமது அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை உரிய பாடசாலை அதிபரின் ஊடாக அனுப்பி, அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளமுடியும்.