365 நாட்களாக தொடரும் கவனயீர்ப்புப் போராட்டம்

முல்லைத்தீவில் நடைபெறும் காணாமல் போனோரின் கவனயீர்ப்புப் போராட்டம் 365 நாட்களை தாண்டி செல்கிறது.

இதுவரை எந்த ஒரு தமிழ் அரசியல் பிரமுகர்களோ அல்லது அரச பிரதிநிதிகளோ பொறுப்பான பதில் எதனையும் வழங்கவில்லை. இருப்பினும் மக்கள் நம்பிக்கையை கைவிடாமல் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காணாமல் போன உறவுகள் மீண்டும் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், தங்கள் தொலைந்த உறவுகளின் படங்களை வைத்திருந்தவாறு கண்ணீருடன் காணப்பட்டனர்.

(நன்றி : படம் – உதயன் பத்திரிகை யாழ்ப்பாணம்)

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles