சங்கானையில் இராணுவ முகாமை நோக்கி ஓடிய திருடர்கள்

​​சங்கானையில் திருட்டில் ஈடுபட்டு, இருவரைக் காயப்படுத்திய ஆறு திருடர்கள் முருகன் கோவிலுக்கு அண்மையிலுள்ள இராணுவ முகாமை நோக்கி ஒட்டியுள்ளனர். பின்னர் அங்கிருந்து முச்சக்கரவண்டி ஒன்றில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர்.

நடுச்சாமம் தேவாலய வீதியிலுள்ள வீட்டில் திருட்டில் ஈடுபட்டுவிட்டு, பின்வளவுகளினூடாக ஓடிய திருடர்கள், முருகன் கோவிலிற்கு அண்மையில் காத்திருந்த முச்சக்கர வண்டியில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர். இந்த இடத்தில் இராணுவ முகாம் ஓன்று உள்ளது. சாதாரண திருடர்கள் இராணுவ முகாமிற்கு அண்மையில் காத்திருந்து திருட்டு தொழிலில் ஈடுபட முடியாது. அதுவும் ஆறு, ஏழு பேர் நடுச்சாமத்தில் இராணுவ முகாமிற்கு அண்மையில் கூடி நிற்பதென்பதே ஒரு சாத்தியமற்ற விடயம்.

எனவே இந்த நிகழ்வு மக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் இராணுவ முகாமிற்கு சென்று விடயத்தைத் தெரிவித்தபோது, இராணுவத்தினர் ஒரு முச்சக்கரவண்டியின் இலக்கத்தை வழங்கியதாக தெரியவருகிறது!!

இந்த திருட்டு சம்பவத்தின்போது 15 பவுண் தங்க நகைகள் ​​மற்றும் ஒரு லட்சம் ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்களின் தாக்குதலால், எஸ்.பிரபாகரன், வி.செல்வநாயகம் ஆகியோர் காயமடைந்தனர்.

கொள்ளையர்கள் விட்டுச் சென்ற ஆறு சோடி பாதணிகள் மற்றும் இரண்டு துவிச்சக்கர வண்டிகள் என்பவற்றை காவல்துறையினர் மீட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles