நல்ல மனிதர்களுக்கு வாக்களியுங்கள் – அங்கஜன்

வடமாகாண முதலமைச்சர் கெளரவ விக்னேஸ்வரன் ஐயா குறிப்பிட்டதைப் போன்று, கட்சிகளை பார்க்காமல், உணர்ச்சிவசப்பட்டு அரசியல்வாதிகள் பேசும் பேச்சை நம்பி ஏமாறாமல், நல்ல மனிதர்களுக்கு வாக்களியுங்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் 16 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.
​​

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles