எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் வைத்தியசாலையில்

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை திருகோணமலையில் கூட்டமைப்பு கட்சி உறுப்பினர்களுடன், நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான மிக நீண்ட கலந்துரையாடலை முடித்துவிட்டு கொழும்பு திரும்பியிருந்தநிலையில் சுகவீனமுற்றிருந்தார்.

தொடர்ச்சியான பயணங்கள், தொடர் கலந்துரையாடல்கள் என ஓய்வின்றி செயற்பட்டதால் கடும் உடல் அசதியே சுகவீனமுற்றமைக்கு காரணம் எனத் தெரியவருகிறது.

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles