அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாகிறார் ஜோ பைடென். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஜோ பைடென் 270 இற்கும் அதிகமான தேர்தல் சபை வாக்குகளைப் பெற்றுள்ளதால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதுவரையில் இரண்டு மாநிலங்களின் முடிவு இன்னும் வெளியாகாவில்லை. இருப்பினும் 75 மில்லியனுக்கும் மேலான வாக்குகளை ஜோ பைடென் பெற்றுள்ளார்.

எதிர்த்துப் போட்டியிட்ட அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 70 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருப்பினும், 270 என்ற தேர்தல் சபை இலக்கை அடையமுடியவில்லை.

அமெரிக்க வரலாற்றிலேயே பெரும் சர்ச்சைகளில் முடிவடைந்த அதிபர் தேர்தலில், பல மோசடிகள் இடம்பெற்றதாக டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளதுடன், நீதி கேட்டு உயர் நீதிமன்றத்தையும் நாடியுள்ளார்.

அமெரிக்காவின் பெரும்பாலான ஊடகங்கள் மற்றும் அனைத்து சமூக வலைத்தளங்கள் என்பன டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராகவே செயற்பட்டிருந்தன. இருப்பினும் தனது அதீத திறமையால் சவால்களை எதிர்கொண்ட டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவில் கொரோனா ஏற்படுத்திய பாரிய தாக்கத்தால் தேர்தலில் தோல்வியடைந்தார்.