2G அலைக்கற்றை முறைகேடு வழக்கில் அனைவரும் விடுவிப்பு

திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், ராஜ்யசபா எம்.பி யுமான கனிமொழி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா உள்ளிட்டோர் சம்பந்தப்பட்டு, இந்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்ட 2G அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பு இன்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டது.

குற்றச்சாட்டை நிரூபிக்க அரசு தரப்பு தவறியதை அடுத்து, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படுகின்றனர் என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷைனி தீர்ப்பளித்தார்.

முழு இந்திய நாடே நீதித்துறையின் மீது வைத்திருந்த நம்பிக்கையை சிதறடிக்குமுகமாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இன்று காலை முதலே நீதிமன்றுக்கு முன்னால் ஆயிரத்திற்கு மேற்பட்ட தி.மு.க தொண்டர்கள் கூடியிருக்கும்போதே குற்றவாளிகளுக்கு சார்பாக தீர்ப்பு வரும் என பலரும் எதிர்வு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles