ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர் சாம்பியன்

மெல்பெர்னில் நடந்து வந்த ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில், சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

Roger Federer wins Australian Open final
(Picture : Roger Federer)

ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று (28/01) நடந்த இறுதி ஆட்டத்தில், ரோஜர் பெடரரை எதிர்கொண்டார் குரோஷிய வீரர் மரின் சிலிக். 3 மணி நேரம் 30 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில், மரின் சிலிக்கை  6-2, 6-7(5/7), 6-3, 3-6, 6-1 ஆகிய செட்களில் போராடி வீழ்த்தினார் ரோஜர் பெடரர்.

கிராண்ட்ஸ்லாம் பிரிவில் பெடரர் வெல்லும் 20-வது பட்டம் இதுவாகும். ஆஸ்திரேலியன் ஓபனில் 6-வதுமுறையாக கிண்ணத்தை வெல்கிறார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles