எம்மில் பலருக்கு வாழ்க்கையில் எதை சாதிப்பது? எதை சாதித்தால் வாழ்க்கையில் உணர்வூக்கம் ஏற்படும் என்பது புரியாத புதிராகவே உள்ளது. வாழ்க்கையின் சுழலோட்டத்தில் சிக்கிய சிறு துரும்புகள் போல நாம் சென்று கொண்டிருக்கிறோம். ஆனால் கீழே இடப்பட்ட பதிவு உங்களில் பலருக்கு புது உத்வேகத்தை தரும் என்பதில் ஐயமில்லை.

99 வயது நிரம்பிய ஜோர்ஜ் கொரோனஸ் என்ற ஆஸ்திரேலிய வயோதிபர் காமன்வெல்த் போட்டிகளில் 100-104 பிரிவினருக்கான ஆண்கள் பிரிவில் 50 மீட்டர் நீச்சல் போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்.

George Corones swimmer world recordஜோர்ஜ் கொரோனஸ் வயது 99 (படம் : Australian Dolphins Swim Team)

இவர் தற்சமயம் நடைபெற்றுவரும் காமன்வெல்த் ஒத்திகை போட்டிகளில் கலந்துகொண்டு 50 மீட்டர் நீச்சல் போட்டியில் 56.12 வினாடியில் கடந்து முன்னைய உலக சாதனையை முறியடித்து புது உலக சாதனையை நிலைநிறுத்தியுள்ளார். இவர் அடுத்த மாதம் தனது நூறாவது பிறந்த தினத்தை பூர்த்தி செய்கிறார்.

இவர், தான் வயோதிபராயினும் மேலும் சாதனை புரிய எண்ணம் கொண்டுள்ளதாக கூறுகிறார்.

காமன்வெல்த் தடகள போட்டிகள் (Commonwealth Games) ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் (Gold Coast) நகரில் எதிர்வரும் ஏப்ரல் 04-15 நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *