Malcom Ranjith – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

நாட்டின் கலாச்சாரத்தை சீரழிக்க அரசியல்வாதிகளுக்கு இடமளிக்க முடியாது – மல்கம் ரஞ்சித்
பெளத்த போதனைகளால் ஒழுக்கம் மிக்க சமூகத்தினர் தோற்றம் பெற்ற இந்த நாட்டின் கலாச்சாரத்தை சீரழிக்க அரசியல்வாதிகளுக்கு இடமளிக்க முடியாது என கத்தோலிக்க பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

போதைவஸ்து பாவனைக்கெதிராக கடும் சட்டங்களை அமுல்படுத்தும் அதேவேளை, கஞ்சா பயிர்செய்கையை சட்டமாக்குவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பேராயர் குற்றம் சாட்டினார்.

மேலும், வெளிநாடுகளில் படித்தவர்கள் இலங்கைக்கு வந்து இரவு நேர தொழில்களையும், கசினோ சூதாட்டங்ளையும் ஊக்குவிக்குமாறு கூறுகின்றனர் என தெரிவித்த பேராயர் மல்கம் ரஞ்சித், சர்வதேச நாணய நிதியமும், உலக வங்கியும் பிரேரிப்பதைப் போன்று, நாட்டிற்கு பொருத்தமற்ற சட்டங்களை நடைமுறைப்படுத்துவது கையேந்தும் நிலைக்கு ஒப்பானதாகும் எனவும் பேராயர் தெரிவித்துள்ளார்.

The post நாட்டின் கலாச்சாரத்தை சீரழிக்க அரசியல்வாதிகளுக்கு இடமளிக்க முடியாது – மல்கம் ரஞ்சித் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அரசாங்கம் சகிக்க முடியாத ஒடுக்குமுறையில் ஈடுபடுகிறது – கர்தினல் மல்கல் ரஞ்சித்
இலங்கை அரசாங்கம் சகிக்க முடியாத ஒடுக்குமுறையில் ஈடுபடுகிறது என கர்தினல் மல்கல் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையின் ஆட்சிமுறை சர்வதேச நியமங்களிற்கு ஏற்ப இடம்பெறுகின்றதா என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை (UNHRC) உறுதிப்படுத்த வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை ஆட்சியாளர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுக் கொடுப்பதை விட்டுவிட்டு, அரசியல் சக்திகள் முன்வைத்த நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்த கடும் முயற்சி செய்கிறார்கள் எனவும் கர்த்தினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் குற்றம் சுமத்தினார்.

The post அரசாங்கம் சகிக்க முடியாத ஒடுக்குமுறையில் ஈடுபடுகிறது – கர்தினல் மல்கல் ரஞ்சித் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ரணில் பிரதமராவது மக்களின் விருப்பமல்ல – அனுர குமார திசாநாயக்க
ஜனாதிபதியும், ரணில் விக்ரமசிங்கவும் சட்டத்திற்கு மாறாக செய்யும் எதையுமே மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என மக்கள் விடுதலை முன்ணனியின் (JVP) தலைவர் அனுர குமார திசாநாயக்கா தெரிவித்துள்ளார்.

மேலும் ரணில் விக்ரமசிங்க ராஜபக்சகளின் காவலன், அவர் ஜனாதிபதியை நம்பலாம், ஜனாதிபதி ரணிலை நம்பலாம் ஆனால் அவரை பிரதமாராக்குவது மக்களின் விருப்பமல்ல என்றும் தெரிவித்த  அனுர குமார திசாநாயக்க, இவர்களின் சூழ்ச்சியில் இம்முறை மக்கள் ஏமாற மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

ஏற்கனவே கத்தோலிக்க மதத் தலைவர் ரஞ்சித் மல்கம் ஆண்டகையும், ஜாதிக ஹெல உறுமயவின்  ஓமல்பே சோபித தேரரும் ரணில் பிரதமராவதை எதிர்த்திருந்தனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ரணிலின் தெரிவை மக்கள் ஏற்பார்களா?

The post ரணில் பிரதமராவது மக்களின் விருப்பமல்ல – அனுர குமார திசாநாயக்க appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கத்தோலிக்கப் பேராயரும் ஜெனிவா சென்றார்
இலங்கையின் கத்தோலிக்க பேராயர் அதி வணக்கத்திற்குரிய மல்கம் ரஞ்சித் அவர்கள் ஜெனிவா சென்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

நேற்று (02/03) இலங்கை நேரப்படி பகல் 2.30 மணிக்கு ஜெனிவாவில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இருப்பினும் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. பேராயர் ஏற்கனவே பரிசுத்த பாப்பரசரை வத்திக்கானில் சந்தித்து ஈஸ்ட்டர் தினத்தில் இடம்பெற்ற பேரவலத்திற்கு இலங்கை அரசு எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமல் உதாசீனம் செய்துவருவதை சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 2019ல் நன்கு திட்டமிடப்பட்டு கிறிஸ்தவர்களின் பெருநாளான ஈஸ்ட்டர் தினத்தில் தேவாலயங்களில் மேற்கொள்ளப்பட்ட தொடர் மனித வெடிகுண்டுத் தாக்குதல்களில் குழந்தைகள், பெண்கள் உட்பட 260 இற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்படிருந்தனர்.

The post கத்தோலிக்கப் பேராயரும் ஜெனிவா சென்றார் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்கள் பரிசுத்த பாப்பரசரைச் சந்தித்தார்
இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கத்திரினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் பரிசுத்த பாப்பரசரை வத்திக்கானில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இலங்கையில் ஈஸ்டர் தினமன்று இடம்பெற்ற மனிதப் பேரவலத்திற்கு இன்னும் நீதி கிடைக்காமை, அது தொடர்பான விளக்கங்கள் மற்றும் இலங்கையில் கத்தோலிக்கர்களின் நிலமை தொடர்பாக  ரஞ்சித் ஆண்டகை அவர்கள் பரிசுத்த பாப்பரசரருடன் உரையாடியுள்ளார். மேலும் வத்திகான் புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் திருப்பலி பூஜையையும் நடத்தியுள்ளார்.

இலங்கையில் 2019ம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் தேவாலயங்களில் இடம்பெற்ற தொடர் மனித வெடிகுண்டுத் தாக்குதல்களில் குழந்தைகள், பெண்கள் உட்பட 260 இற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்படிருந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் கிறிஸ்தவர்கள் ஆவர்.

இந்த தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் (நல்லாட்சி அரசு உட்பட) எந்தவொரு உருப்படியான நடவடிக்கையையும் இதுவரை எடுத்திருக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

The post பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்கள் பரிசுத்த பாப்பரசரைச் சந்தித்தார் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நாடகம் தொடர்கிறது
இலங்கையில் 2019 ஏப்ரல் மாதம் இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் நடத்தப்பட்ட தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் செயற்பட்ட முக்கிய சூத்திரதாரிகள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. இது தொடர்பான விசாரணைகளும் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

இந்த தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் 52,000 பக்கங்களைக் கொண்ட அறிக்கை சட்டமா அதிபரின் பரிசீலனையின் கீழ் உள்ளதாக இலங்கை காவல்துறை மா அதிபர் சந்தன விக்ரமத்ன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சஹ்ரான் கும்பல் மொத்த இஸ்லாமிய பயங்கரவாத கும்பலின் ஒரு சிறு பகுதியே எனத் தெரிவித்துள்ளதுடன், இதுவரை 723பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 311பேர் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். உயிரிழந்த மக்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆட்சி மாற்றம்

நல்லாட்சி அரசின் ஆட்சியில் இடம்பெற்ற இந்த தொடர் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பாக அப்போதைய ஆட்சியாளர்கள் விசாரணையை மேற்கொண்ட விதம், மைத்திரி-ரணிலின் நாடகம் அதன் பின்னர்  இடம்பெற்ற ஆட்சி மாற்றம் போன்ற நிகழ்வுகள் வெளிப்படையாகவே பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியிருந்தன.

ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு நாடகம் போன்றே தோற்றமளித்தது. சந்தேகப்பட்ட மாதிரியே ஆட்சி மாற்றமும் இடம்பெற்றதுடன், விரும்பியதைச் செய்யக் கூடிய வகையில் பயங்கரவாத தடைச் சட்டமும் நாட்டில்  அமுல்படுத்தப்பட்டது.

முஸ்லிம்களின் நிலை

தற்போது காவல்துறை மா அதிபரின் கருத்தை உற்று நோக்கும்போது, “சஹ்ரான் கும்பல் மொத்த இஸ்லாமிய பயங்கரவாத கும்பலின் ஒரு சிறு பகுதியே” எனத் தெரிவித்திருப்பது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நாடகம் தொடரப் போவதாகவே ஐயப்பட வேண்டியுள்ளது. இது அப்பாவி இஸ்லாமிய மக்களின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதுடன், அவர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்ற ஒரு எண்ணத்தையும் அவர்கள் மனதில் ஏற்படுத்தும். (ஏற்கனவே பல வசதி வாய்ந்த முஸ்லிம் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார்கள்.)

தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள இஸ்லாமிய சகோதரர்களில் பலர் நிச்சயமாக அப்பாவிகளாகவே இருப்பார்கள். ஒன்றிரண்டு சுயநல இஸ்லாமிய அரசியல்வாதிகளின் செயற்பாட்டாலும், சிங்கள பேரினவாத அரசின் கபடத்தனத்தாலும் அப்பாவி இஸ்லாமிய மக்கள் பலிக்கடா ஆக்கப்பட்டுள்ளார்கள்.

இது 1983 தொடக்கம் இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு இடம்பெற்ற அல்லது இடம்பெற்று வருகின்ற நிலைக்கு ஒப்பானதாகும். அதாவது எந்த நேரத்திலும் யாரும் கைது செய்யப்படலாம், வியாபார ஸ்தாபனங்களை வலோத்காரமாக கையகப்படுத்தலாம் போன்ற ஒரு நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசு ஆட்சி செய்த காலத்தில் இடம்பெற்ற இந்த தொடர் குண்டுத் தாக்குதல்களால் 260இற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள்.

மகிந்தவின் நெருங்கிய சகாவும், அதிகமாக அரசியல் பேசும் மதபோதகரான கத்திரினல் மல்கம் ரஞ்சித் கடந்த இரண்டு வருடங்களாக தமது மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியாத ஒரு நிலையிலேயே உள்ளார். வத்திக்கான் தலையிடும், கத்தோலிக்கர்களுக்கு நீதி கிடைக்குமென்ற நம்பிக்கையும் கொரோனா பரவலால் இல்லாமல் போயுள்ளது.

தற்போதைய ஆட்சியாளர்களின் பலமும், இலங்கை மீதான மேற்குலக நாடுகளின் குறைந்தளவு செல்வாக்கும், இந்தியாவின் பலவீனமும், அலட்சியமும் இலங்கையில் பல ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் போன்ற நாடகங்களை அரங்கேற்ற உதவப் போகின்றது என்பது மட்டும் திண்ணம்.

The post ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நாடகம் தொடர்கிறது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.