Angajan Ramanathan – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

உண்மையான தமிழ்த்தேசியவாதி நானே – அங்கஜன் இராமநாதன்
வரும் பொதுத்தேர்தலில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் தபால்பெட்டி சின்னத்தில் போட்டியிடும் அங்கஜன் இராமநாதன், “நானே உண்மையான தமிழ்த்தேசியவாதி” என தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தங்களுக்குள் உட்பூசல்கள் செய்து நமது வாய்ப்புக்களை தாரை வார்த்துக்கொடுத்து, தமிழ் மக்களை கல்வியில் நலிவுறச் செய்து பொருளாதாரத்தில் வீழ்ச்சியடையச் செய்து  தமிழர்களை புலம்பெயர் தமிழராக்கி விட்டு, மக்களுக்கென்று எதுவும் செய்யாமல் இனியும் எதுவும் செய்வதற்கு எந்த திட்டமும் இல்லாமல் சக தமிழர்களை உணர்வுரீதியாகவே தாக்கி தம் சுயலாபத்திற்கு பயன்படுத்துபவர்களா உண்மையான தமிழ்த்தேசியவாதிகள்?

தமிழ் மக்களின் இருப்பைத் தக்கவைத்து, மக்களின் நலன்களைக் காக்கும், அவர்களை பொருளாதாரத்தில் வலுப்படுத்தும், கல்வியில் முன்னேற்றம் பெறச் செய்யும் முயற்சியில் ஒருங்கிணைந்து செயற்பட்டு, தமிழ் மக்களின் வாழ்க்கையை மேம்மடுத்துபவரா உண்மையான தமிழ்த்தேசியவாதி?

நான் என் தமிழ் மக்களின்  இருப்பை தக்கவைத்து, அவர்கள் தேவைகளை நிறைவேற்றி, அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்துவதை என் முழுநோக்காய் கொண்டு செயற்படுகிறேன். வெற்றுக்கூச்சலிடவில்லை. அதனால்தான் சொல்கிறேன், நான் தான் உண்மையான தமிழ்த்தேசியவாதி. என அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.

The post உண்மையான தமிழ்த்தேசியவாதி நானே – அங்கஜன் இராமநாதன்  appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

யாழ் தேர்தல் களம் 2024
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இம்முறை ஆறு ஆசனங்களுக்காக கடும் போட்டி நிலவுகின்றது.

யாழ் தேர்தல் மாவட்டத்தில் சனத்தொகை கணக்கெடுப்பின்படி, கடந்தகால தேர்தல்களில் ஏழு ஆசனங்களாக இருந்து இம்முறை ஆறு ஆசனங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

ஆறு அசனங்களை கைப்பற்றுவதற்கு 23 அரசியல் கட்சிகள் மற்றும் 23 சுயேட்சை வேட்பாளர்கள் என 396பேர் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். ஏறக்குறைய 593,000 மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள யாழ் தேர்தல் மாவட்டத்தில், அளவிற்கதிகமான வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ஒற்றுமையின்மையால் ஏற்பட்டுள்ள பிரதான தமிழ் அரசியல் கட்சிகளின் பிளவும், அதிக சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுவதும் மற்றும் அதிகரித்துச் செல்லும் பிரதான சிங்கள கட்சிகளின் (NPP..) செல்வாக்கும் பாரிய தாக்கத்தை யாழ் தேர்தல் மாவட்டத்தில் ஏற்படுத்தப் போகின்றது.

தமிழரசுக் கட்சி (சின்னம் வீடு)

2015 தேர்தலுடன் ஒப்பிடும்போது 2020இல் பிரதான தமிழ் கட்சியான தமிழரசுக் கட்சி 95,590 வாக்குகளை இழந்திருந்தது. 2020இல் கட்சி இருந்த நிலமையுடன் ஒப்பிடும்போது, 2024இல் கட்சியின் நிலமை மிக சிக்கலான மோசமான நிலமையாகவே உள்ளது. கட்சியின் முக்கிய நீண்ட கால உறுப்பினர்களின் வெளியேற்றம், சுமந்திரனின் ஆதிக்கம், அறிமுகம் குறைந்த புதிய வேட்பாளர்கள், தேசிய மக்கள் சக்தியின் (NPP) எழுச்சி என பல வழிகளிலும் தமிழரசுக் கட்சிக்கு இறங்கு முகத்திற்கான நிலமையே காணப்படுகிறது.

யாழ் மாவட்டத்திற்கான வேட்பாளர்களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஶ்ரீதரன் மட்டுமே வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் காணப்படுகின்றது. இரண்டாம் நிலையில் முன்னாள் யாழ் நகர மேயர் ஆர்னோல்ட் அல்லது சுமந்திரன் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (சின்னம் சைக்கிள்)

2015 தேர்தலுடன் ஒப்பிடும்போது 2020இல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 40,000 இற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மாவட்டரீதியில் இரண்டாம் இடத்தினையும் பெற்றிருந்தது. 2024 தேர்தலில் தமிழரசுக் கட்சியின் உடையும் வாக்குகளில் கணிசமான பங்கு முன்னணிக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. மிகுதி வாக்குகள் தமிழரசுக் கட்சியில் இருந்து பிரிந்த அணியினரின் ஜனநாயக தமிழரசுக் கட்சிக்கும் (மாம்பழம்), விக்னேஷ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணிக்கும் (மான்), சொற்ப அளவில் தேசிய மக்கள் சக்திக்கும் (திசை காட்டி) கிடைக்கும்.

கடந்த தேர்தலில் தீவகம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முன்னணியினர் சிறப்பாக பிரச்சாரத்தை மேற்கொள்ளவில்லை என்பதும் இங்கே சுட்டிக் காட்டப் படவேண்டியது. இருப்பினும் இம்முறையும் கடும் போட்டியின் மத்தியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு ஆசனத்தை யாழ் மாவட்டதில் கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது.

அங்கஜன் அணி(தபால் பெட்டி)

2015 தேர்தலுடன் ஒப்பிடும்போது 2020இல், அங்கஜன் அணி 32,000 இற்கும் அதிகமான வாக்குகள் பெற்று மாவட்டதில் மூன்றாம் இடத்தைப் பிடித்திருந்தனர். இம்முறை தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடும் அங்கஜன், கடந்த தேர்தலில் யாழ் மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் (36,356) பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுனவிற்கு நெருக்கமான ஆள் என பல குழப்பங்கள் யாழ் மக்கள் மத்தியில் இருப்பினும், இவர் மக்களுடன் அனுகும் முறை மற்றும் திறமையான பிரச்சார செயற்பாடுகளினால், இம்முறையும் வெற்றியீட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

EPDP (வீணை)

2015 தேர்தலுடன் ஒப்பிடும்போது 2020இல், EPDP 15,500 இற்கும் அதிகமான வாக்குகள் பெற்று யாழ் மாவட்டத்தில் நான்காம் இடத்தைப் பெற்றிருந்தது. நீண்ட கால (யாழ்) அரசியல் அனுபவம், பலருக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுத்தமை, தீவக வாக்குகள் என டக்ள்ஸ் தேவானந்தாவின் வாக்கு வங்கி மிக உறுதியாக இருக்கிறது. இவரது தெற்கு அரசியல் இராஜ தந்திரங்கள் வடக்கு மண்ணில் பாதிப்பை ஏற்படுத்தாது. எனவே இம்முறையும் டக்ளஸ் தேவானந்தாவும் வெற்றியீட்டுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய மக்கள் சக்தி (திசை காட்டி)

இலங்கை அரசியலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்திய அண்மைய நிகழ்வு இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024. தேசிய மக்கள் சக்தியின் (NPP) வேட்பாளரான அநுர குமார திசாநாயக்கா பெரு வெற்றியீட்டி இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதியாக பதவியேற்றார்.

நாடளாவியரீதியில் தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி இன்னும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இந்த எழுச்சி வடக்கு கிழக்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தப்போவதை, தமிழ்க் கட்சிகள் கட்சி வேறுபாடின்றி தேசிய மக்கள் சக்தியை “சிங்கள” கட்சி எனும் தொனியில் எதிர் பிரசாரங்களை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளமை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி எந்தளவிற்கு யாழில் இருக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. நேர்மையான, இளம் தலைமுறையினரை தேர்தல் களத்தில் இறக்கியுள்ள தேசிய மக்கள் சக்தி, யாழில் உள்ள பல சங்கங்கள், திணைக்களங்கள் மற்றும் பல அமைப்புகளில் தமது செல்வாக்கினை வைத்துள்ளனர்.

மேலும்,மாற்றத்தை விரும்பும் இளம் தலைமுறையினர் மற்றும் பாரம்பரிய தமிழ் அரசியலில் ஏமாற்றம் அல்லது சலிப்படைந்த மக்கள், தேசிய மக்கள் சக்திக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழக்கி பார்க்க முன்வருவார்கள். எனவே இம்முறை தேர்தலில், தேசிய மக்கள் சக்தி ஒரு ஆசனத்தை வெல்லக்கூடும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்குகளைப் போக விடாமல் தடுத்தால், அந்த வாக்குகள் தமக்கு வருமென அனைத்து தமிழ்க் கட்சிகளும் முழுமையாக நம்புகின்றன. எனவே தேசிய மக்கள் சக்திக்கு எதிரான கடுமையான பிரச்சாரங்களை வரும் வாரங்களில் நாம் காணக்கூடியதாக இருக்கும்.

குறிப்பாக இம்முறை தேர்தலில் ஆசனங்களைப் பெறமாட்டார்கள் என நம்பப்டும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (சங்கு சின்னம்), தமிழரசு கட்சியின் மாற்று அணி (மாம்பழ சின்னம்) மற்றும் மதுபான அனுமதிபத்திர விடயத்தில் மிக மோசமாக சேதமடைந்திருக்கும் C.V.விக்னேஷ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி (மான் சின்னம்) ஆகியோரால் தேசிய மக்கள் சக்திக்கெதிரான பிரசாரங்கள் அதிகளவில் முன்னெடுக்கப்படலாம்!

– மாற்றம் ஒன்றே மாறாதது –

பாராளுமன்றத் தேர்தல் 2020
யாழ் மாவட்டம்

The post யாழ் தேர்தல் களம் 2024 appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவராக அங்கஜன்
இலங்கை சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களில் ஒருவராக அங்கஜன் இராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று (21/11) இடம்பெற்றபோது, கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனா மேற்படி நியமனத்தை வழங்கினார்.

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமநாதன், யாழ் மாவட்டத்தில் அதிகளவு வாக்குகள் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவராக அங்கஜன் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

வடக்கு கிழக்கிலும் தீ வைப்பு சம்பவங்கள்
காலிமுகத்திடலில் அமைதியான முறையில் அரச எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வந்த மக்களுக்கு எதிராக மகிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுன கட்சி பிரமுகர்களாலும் அவர்களின் ஏற்பாட்டில் வாகனங்களில் கொண்டு வந்து இறக்கப்பட்ட காடையர்களாளும் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை சம்பவங்கள் இப்போது நாடுமுழுவதும் அரசிற்கெதிரான வன்முறைப் போராட்டமாக மாறியுள்ளது.

வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேசத்தில் அமைந்திருந்த அங்கஜன் ராமநாதனின்  மக்கள் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இலங்கை சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அங்கஜன், கடந்த பொதுத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் அதிகளவான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு ஏறாவூர்ப் பிரதேசத்தில் அமைந்திருந்த நஸீர் அஹமட்டின் கட்சி அலுவலகமும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான நஸீர் அஹமட், அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளையும் பெற்றிருந்தார். பின்னர் இவரை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கியிருந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.

The post வடக்கு கிழக்கிலும் தீ வைப்பு சம்பவங்கள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பிரதமரால் மட்டுவிலில் விசேட பொருளாதார மத்திய நிலையம் திறந்து வைப்பு
பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் யாழ் மட்டுவில் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த விசேட பொருளாதார மத்திய நிலையம் நேற்று (20/03) திறந்து வைக்கப்பட்டது.

சுமார் 200 மில்லியன் ரூபாய் செல்வில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந் நிலையம், விவசாயிகள் தமது உற்பத்திப் பொருட்களுக்கு தகுந்த விலையினைப் பெற்றுக்கொள்ளவும், நுகர்வோர் மலிவு விலையில் காய்கறிகள் மற்றும் பழங்களைப் பெற்றுக்கொள்ளவும் வசதியினை ஏற்படுத்திக் கொடுக்கின்றது.

மட்டுவில் விசேட பொருளாதார நிலையத்திற்கு, பதுளை பொருளாதார மத்திய நிலையம் மற்றும் யாழ் சந்தையிலிருந்து மரக்கறிகள் மற்றும் பழவகைகள் என்பன கிடைக்கப் பெறவுள்ளன.

இந்நிகழ்வில் யாழ் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ் மாவட்ட அரச அதிபர் திரு.மகேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post பிரதமரால் மட்டுவிலில் விசேட பொருளாதார மத்திய நிலையம் திறந்து வைப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

யாழ் தேர்தல் மாவட்ட முடிவுகளின் ஒப்பீடு
யாழ் தேர்தல் மாவட்டத்தில் 2015 நாடாளுமன்ற தேர்தலுடன் ஒப்பிடுகையில், 2020 இற்கான நாடாளுமன்ற தேர்தலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி, டக்ளஸ் தேவாந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் அங்கஜன் தலைமையிலான இலங்கை சுதந்திரக் கட்சி ஆகியன மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளன.

இதேவேளை வடமாகாண சபை முன்னாள் முதல்வரான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் போட்டியிட்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி (சின்னம் ) 35,927 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது. குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியையும் யாழ் மக்கள் அங்கீகரித்து ஒரு ஆசனத்தைப் பெறச் செய்துள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

2015 நாடாளுமன்ற தேரத்லுடன் ஒப்பிடும்போது, யாழ் தேர்தல் மாவட்டத்தில் மட்டும் இலங்கை தமிழரசுக் கட்சி 94,590 வாக்குகளை இழந்துள்ளது. இது ஒரு மாபெரும் இழப்பாகும்.

நல்லாட்சி அரசின் முழு ஆசீர்வாதம் இருந்திருந்தும் எதையுமே மக்களுக்குப் பெரிதாகச் செய்திராமை, பழைய வேட்பாளர்களே தேர்தலில் மீண்டும் போட்டியிட்டமை, இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்காமை போன்ற காரணங்களால் இம்முறை மக்களின் மனங்களை அவர்களால் வெல்ல முடியாமல் போயுள்ளது.

தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி

தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி (சின்னம் ) பல சவால்களின் மத்தியில் போட்டியிட்டு, யாழ் தேர்தல் மாவட்டத்தில் 55,303 வாக்குகளப் பெற்று ஒரு ஆசனத்தையும் வென்றது. 2015 தேர்தலுடன் ஒப்பிடும்போது, இது ஏறக்குறைய 268% அதிகரிப்பாகும். அவர்களைப் பொறுத்தமட்டில் இது ஒது இமாலய சாதனையாகும். மேலும் தேசிய பட்டியலிலும் ஒரு ஆசனத்தை வென்று, மொத்தமாக இரு ஆசனக்களைக் கைப்பற்றி தம்மை மிகவும் வலுப்படுத்தியுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டம் மற்றும் ஊர்காவற் தொகுதி (தீவகப் பகுதிகளில்) தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி பெரிதாக வாக்குகளைப் பெறவில்லை. அவர்கள் பிரச்சார நடவடிக்கைகளை ஒழுங்காக முன்னெடுக்கவில்லையோ எனத் தோன்றுகிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் வெறும் 2,528 வாக்குகளையே பெற்றுள்ளார்கள். இதேவேளை ஊர்காவற்துறை தொகுதியில் 1,376 வாக்குகளையே பெற்றுள்ளார்கள்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி 31,156 வாக்குகளைப் பெற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைப் பொறுத்த மட்டில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் ஒரு நிலையான வாக்கு வங்கி உள்ளது. இருப்பினும் அக்கட்சியின் முன்னாள் நாடாளமன்ற உறுப்பினரான முருகேசு சந்திரகுமார் இம்முறை தனித்து சுயாதீனமாகப் போட்டியிட்டதால், வாக்கு வங்கியில் சரிவு வருமென எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இம்முறை 45,797 வாக்குகளைப் பெற்றுள்ளனர. இது 2015 பெற்ற வாக்குகளை விட 51.4% அதிகமாகும்.

சந்திரிக்கா மற்றும் மகிந்த அரசில் அங்கம் வகித்த டக்ளஸ் தேவானந்தாவினால் அபிவிருத்தி என பெரிதாக எதையும் செய்ய முடியாது போயிருந்தாலும், பல இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினைப் பெற்றுக் கொடுத்திருப்பதனால், அவரது வாக்கு வங்கியில் எப்போதும் வீழ்ச்சி வரப்போவதில்லை.

அங்கஜன் இராமநாதன்

இலங்கை சுதந்திரக் கட்சி உறுப்பினரான அங்கஜன் இராமநாதன் கை சின்னத்தில் () நின்று யாழ் மாவட்டத்தின் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் (36,356) பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் சுதந்திரக் கட்சி உறுப்பினராக இருப்பினும், இவரை இப்போது வழி நடத்துவது மகிந்த அணியா (பொதுஜன பெரமுன) அல்லது சுதந்திரக் கட்சியா என தெரியவில்லை.உயர் அரச செல்வாக்கு மற்றும் பணபலம் இருப்பதனால் அங்கஜனால் பிரச்சாரங்கள் மிகத் திறமையாக முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் தனித்து நின்று சிறப்பாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்.

இம்முறை யாழ் தேர்தல் மாவட்டத்தில் சுதந்திரக் கட்சி 49,373 வாக்குகளைப் பெற்றிருந்தது. இது 2015 தேர்தலுடன் ஒப்பிடும்போது, ஏறக்குறைய 185% அதிகரிப்பு. ஒரு பழம்பெரும் தேசியக் கட்சி தனித்துப் போட்டியிட்டு ஒரு ஆசனத்தை வென்றது யாழில் மட்டுமே!! அதுவும் முற்றுமுழுதாக தமிழ் வாக்குகள் மூலம் கிடைத்த வெற்றி. இதற்கு பிரதியுபகாரமாக அங்கஜன் நல்லது செய்வாரென்று நம்புவோமாக.

இனிவரும் காலங்கள் பல சவால்கள் நிறைந்தவையாக அமையப் பெறும். கொரோனா தாக்கத்தினால் உலகமே தலை கீழாகப் போயுள்ளது. அபிவிருத்தியடைந்த நாடுகள் பாரிய பொருளாதார பின்னடைவுகளை எதிர்கொண்டுள்ளன. இலங்கைக்கு கிடைக்கும் உதவிகளின் எண்ணிக்கையில் பல மடங்கு வீழ்ச்சி ஏற்படும். இதனால் அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்பில் தடங்கல்கள் ஏற்படும். ஆகவே தன்னிறைவான பொருளாதாரத்திற்கான வழிவகைகளைக் கண்டறிந்து யாழ் முதல் காலிவரை அதனை ஊக்குவித்து, மேம்படுத்தினால் மட்டுமே இலங்கை அபிவிருத்தியடையும். இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பும் மிக மிக அவசியம்.

The post யாழ் தேர்தல் மாவட்ட முடிவுகளின் ஒப்பீடு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

தேர்தலில் EPDP, பொதுஜன பெரமுன மற்றும் அங்கஜன் அணியைப் புறக்கணித்த மக்கள்
நேற்று (16/11) இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட கோத்தபாய ராஜபக்ச வட இலங்கையில் பெரிதாக வாக்குகளைப் பெற முடியவில்லை. இவருக்கு ஆதரவாக EPDP, பொதுஜன பெரமுனவின் யாழ் அணி மற்றும் அங்கஜன் அணியினர் கடுமையான தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தனர்.

யாழ் பாராளுமன்ற உறுப்பினர்களான EPDP தலைவர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இலங்கை சுதந்திரக் கட்சியின் அங்கஜன் ஆகியோர் நேரடியாக களத்தில் இறங்கி பரவலான பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தபோதும் மக்களின் மனங்களை வெல்ல முடியவில்லை.

2015 இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் யாழ் மாவட்டத்தில் மகிந்தவிற்காக பிரச்சாரம் செய்த டக்ளஸ் தேவானந்தவினால் 74,454 வாக்குகளை பெற முடிந்திருந்தது. இருப்பினும் 2019இல் பெரும் அணியாக (டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் மற்றும் பொதுஜன பெரமுன யாழ் அணி) செயற்பட்டும் இவர்களால் வெறும் 23,261 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

இதேவேளை வன்னி மாவட்டங்களில் கடந்த 2015 இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மகிந்த 34,377 வாக்குகளைப் பெற்றிருந்தார். ஆனால் இம்முறை கோத்தபாய ராஜபக்சவினால் 26,105 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

மேற்குறித்த நிகழ்வுகள் EPDP, பொதுஜன பெரமுன மற்றும் அங்கஜன் அணியை வடபகுதி மக்கள் முற்றாகப் புறக்கணித்துள்ளார்கள் என்பதை மிகத்தெளிவாகக் காட்டுகிறது.

The post தேர்தலில் EPDP, பொதுஜன பெரமுன மற்றும் அங்கஜன் அணியைப் புறக்கணித்த மக்கள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

யாழ் வருகிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா
வரும் 19ம் திகதி யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா, யாழ் மாவட்டத்தில் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்கிறார்.

சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜனின் தலமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், ஜனாதிபதியும் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post யாழ் வருகிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

நல்ல மனிதர்களுக்கு வாக்களியுங்கள் – அங்கஜன்
வடமாகாண முதலமைச்சர் கெளரவ விக்னேஸ்வரன் ஐயா குறிப்பிட்டதைப் போன்று, கட்சிகளை பார்க்காமல், உணர்ச்சிவசப்பட்டு அரசியல்வாதிகள் பேசும் பேச்சை நம்பி ஏமாறாமல், நல்ல மனிதர்களுக்கு வாக்களியுங்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் 16 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.

The post நல்ல மனிதர்களுக்கு வாக்களியுங்கள் – அங்கஜன் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.