Ukraine – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

13,000 வரையிலான உக்ரேனிய படையினர் உயிரிழப்பு
ரஷ்யா உக்ரேன் போர் தொடங்கிய நாளிலிருந்து இதுவரை 10,000 தொடக்கம் 13,000 வரையிலான உக்ரேனிய படையினர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உக்ரேனிய ஜனாதிபதியின் ஆலோசகரின் கருத்துப்படி, 10,000 தொடக்கம் 13,000 வரையிலான இராணுவத்தினர் போரில் இறந்துள்ளார்கள் என தெரியவருகின்றபோதிலும், உண்மையான இழப்புகள் அதிகமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

இருப்பினும் உக்ரேனிய இராணுவத்தினர் எவ்வித உத்தியோகபூர்வ உயிரிழப்பு விபரங்களையும்  இதுவரை வெளியிடவில்லை.

இதேவளை இதுவரையிலான போரில் ரஷ்யாவின் 9,300 படையினர் உயிரிழந்துள்ளார்கள் என ரஷ்யாவின் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றபோதிலும், குறைந்தது 18,000 இற்கும் அதிகமாக ரஷ்ய படைகள் இறந்திருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

The post 13,000 வரையிலான உக்ரேனிய படையினர் உயிரிழப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

உக்ரேன் மீது மீண்டும் கடும் ஏவுகணை தாக்குதல்கள்
உக்ரேன் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல்களை ரஷ்யா ஆரம்பித்துள்ளது. உக்ரேனின் பல பகுதிகளிலும் ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன.

ஏவுகணைகள் உக்ரேனின் பிரதான மின் உற்பத்தி கட்டமைப்புகளை இலக்கு வைத்து ஏவப்பட்டுள்ளதாகவும், இதனால் கிவ், லிவிவ் மற்றும் ஒடேசா பிராந்தியங்கள் இருளில் மூழ்கியுள்ளதாகவும் உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடும் உறைபனி குளிர்காலம் ஆரம்பிக்கும் இந்நேரத்தில், மின்சாரமின்றி வாழ்வது மிக மிக கடினமானதொன்றாகும். கிவ் மாநகர மேயரின் கருத்துப்படி, இரண்டாம் உலகப் போரின் பின்னர் உக்ரேன் கடும் குளிர்காலத்தை எதிர்கொள்ள உள்ளது என தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் இந்த தாக்குதலின் பின்னர், உக்ரேன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கி, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையிடம் விரைவாக உக்ரேனின் சமாதான பொறிமுறைக்கு ஆதரவு வழங்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The post உக்ரேன் மீது மீண்டும் கடும் ஏவுகணை தாக்குதல்கள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இங்கிலாந்து பிரதமர் உக்ரேனுக்கு விஜயம் 🎥
இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் போர் இடம்பெறும் உக்ரேனுக்கு அதிரடி விஜயம் மேற்கொண்டார்.

உக்ரேன் தலைநகர் கிய்வில் பிரதமர் ஸெலென்ஸ்கியுடன் சந்திப்பையும் மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட சில இடங்களையும் பார்வையிட்டார்.

தனது விஜயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த பொரிஸ் ஜோன்ஸன், இந்த விஜயம் உக்ரேனிய மக்களுக்கான எமது ஆதரவைக் காட்டுவதாக அமைகின்றது. மேலும் உக்ரேனிய பிரதமர் ஸெலென்ஸ்கி ஒரு சிங்கத்தைப் போல துணிவு உடையவர் எனவும் பாராட்டியுள்ளார்.

The post இங்கிலாந்து பிரதமர் உக்ரேனுக்கு விஜயம் 🎥 appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

USD.800 மில்லியன் பெறுமதியான ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா
கடந்த நான்கு கிழமைகளாக இடம்பெற்று வரும் ரஷ்யா-உக்ரைன் போரினால் உக்ரைனின் பல பகுதிகள் சுடுகாடாக மாறியுள்ளது. இது ஏறத்தாள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியாவில் இடம்பெற்ற கட்டிட மற்றும் சொத்து அழிவுகளுக்கு ஒப்பானது.

தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் விமான குண்டு வீச்சினால் பெரும்பாலான கட்டிடங்கள் தரை மட்டமாகியுள்ளன. இவ்வாறான நிலையில் அமெரிக்கா வழங்கும் ஆயுத தளபாடங்களுடன் முதலாவது கப்பல் இன்னும் ஓரிரு தினங்களில் உக்ரைனை வந்தடையவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

800 மில்லியன் டொலர் பெறுமதியான பாரிய ஆயுத தளபாடங்களை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்குகின்றது. இருப்பினும் எவ்வகையான ஆயுதங்கள் வழங்கப்படுகிறது என எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.

The post USD.800 மில்லியன் பெறுமதியான ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

1,300 உக்ரேனியப் படையினர் உயிரிழப்பு – உக்ரைன் ஜனாதிபதி
ரஷ்ய ஆக்கிரமிப்பு தொடங்கிய நாளிலிருந்து இதுவரை 1,300 உக்ரேனியப் படையினர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதேவேளை இதுவரையில் 500 – 600 ரஷ்யப் படைகள் சரணடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தலைநகர் கிய்விலிருந்து 25km தூரத்தில் நிலைகொண்டுள்ள ரஷ்யப் படையினர், தமது பாரிய இராணுவ வாகன தொடரணியில் சில மாற்றங்களைச் செய்து, தலைநகரைக் கைப்பற்றும் போருக்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருவதாகவும், அதனை எதிர்கொள்ள உக்ரேனியப் படையினரும் தலைநகரைச் சுற்றி புதிய வியூகங்களை அமைத்துள்ளதாகவும் மேற்குலக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வேளையிலும் உக்ரேனின் தலைநகரைக் கைப்பற்றுவதற்கான கடும் சண்டை இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இடம்பெற்ற மோதல்களை விட, இனிமேல் இடம்பெறவுள்ள மோதல்கள் மிக மிகக் கடுமையாக இருக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

The post 1,300 உக்ரேனியப் படையினர் உயிரிழப்பு – உக்ரைன் ஜனாதிபதி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

உக்ரேனிய மக்களுக்கான கூகுளின் சேவை
உக்ரேனிய அரசாங்கத்தின் வேண்டுகோளிற்கிணங்க, கூகுள் நிறுவனம் புதிய அம்சத்தை ஆன்ட்ரோய்ட் தொலைபேசிகளை பாவிக்கும் உக்ரேனிய மக்களுக்காக செயற்படுத்தியுள்ளது.

ரஷ்ய போர் விமானங்கள் நடத்தப் போகும் தாக்குதல்களை மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கும் புதிய அம்சத்தைதான் கூகுள் நிறுவனம் உக்ரேனிய நாட்டு ஆன்ட்ரோய்ட் பாவனையாளர்களுக்காக  செயற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கூகுள் பூகம்பங்கள் ஏற்படப்போவதைக் கண்டறியும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திவருகிறது. தற்போது அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித்தான் விமான தாக்குதல் இடம்பெறப்போகும் எச்சரிக்கையையும் மக்களுக்கு விடுத்து வருகிறது.

ரஷ்ய உக்ரேனிய போர் ஆரம்பித்த ஒரு சில நாட்களிலேயே கூகுள் தனது வரைபட சேவையை (Google Maps) உக்ரேனில் நிறுத்தியிருந்தது. இதற்கு அந்நிறுவனம் தெரிவித்திருந்த காரணம், மக்களின் நடமாட்டம் மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளின் தரவுகளை ரஷ்ய உளவுப் பிரிவினர் பெற்றுக்கொள்வதைத் தடுப்பதற்காகவே தாம் இதனை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது.

The post உக்ரேனிய மக்களுக்கான கூகுளின் சேவை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

உக்ரைனில் 1.5 மில்லியன் மக்கள் இடம்பெயர்வு
உக்ரைன் மீது ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால் இதுவரை 1.5 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை (UNHCR) ஆணையாளர் (f)பிலிப்போ கிராண்டி தெரிவித்துள்ளார். இது இரண்டாம் உலகப் போரிற்குப் பின்னர், ஐரோப்பாவில் இடம்பெறும் மிகப் பெரிய இடம்பெயர்வு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதுவரை 406 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும், 801பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபை (OHCHR) தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அவ் அமைப்பு தெரிவித்துள்ளது.

The post உக்ரைனில் 1.5 மில்லியன் மக்கள் இடம்பெயர்வு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

உக்ரைனின் அணு மின் உற்பத்தி நிலையத்தில் பாரிய தீ விபத்து
தென்கிழக்கு உக்ரைனில் அமைந்துள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு மின் உற்பத்தி நிலையத்தில் தீ பரவியுள்ளது.

ரஷ்யா மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலிலேயே இந்த பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக உக்ரேனிய தரப்பினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த மின் உற்பத்தி நிறுவனம் பாதுகாப்பாக உள்ளது எனவும், அணுக்கதிர் வெளியேற்றம் எதுவும் இதுவரை இல்லை எனவும் பிராந்திய அரச அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை தாக்குதலுக்குள்ளான அணு மின் நிலையத்தின் நிலை குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடென் மற்றும் சர்வதேச அணுசக்தி மேலாண்மை (IAEA) உயர் அதிகாரி ர(f)பாயல் குரோசி ஆகியோர் உக்ரேனிய ஜனாதிபதியின் அதிகாரிகளுடன் நேரடியாக தொலைபேசியில் பேசி, நிலவரங்களைத் தெரிந்துள்ளனர்.

The post உக்ரைனின் அணு மின் உற்பத்தி நிலையத்தில் பாரிய தீ விபத்து appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

100,000 இலவச பயணச் சீட்டுக்களை வழங்கும் விமான நிறுவனம்
உக்ரைனில் இருந்து இடம்பெயரும் அகதிகளின் நலன் கருதி, ஹங்கேரி நாட்டு விமான நிறுவனமான Wizz Air 100,000 பயணச் சீட்டுக்களை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது.

ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாக்கியா மற்றும் ரோமானியா போன்ற நாடுகளில் இருந்து புறப்படும் Wizz Air விமானங்களிலேயே இந்த இலவச பயணச் சீட்டுகள் வழங்கப்படுவதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுவரையில் உக்ரைனிலிருந்து 660,000பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என அகதிகளுக்கான ஐ.நா நிறுவனம் தெரிவித்துள்ளது.

WIZZ is committed to helping Ukrainian refugees reach their destination, wherever that may be. We are providing 100,000 free seats on short-haul flights departing from Poland, Slovakia, Hungary, and Romania in March. Book your travel at https://t.co/eDw80hGC2k pic.twitter.com/2duHFtPdr3
— Wizz Air (@wizzair) March 1, 2022

The post 100,000 இலவச பயணச் சீட்டுக்களை வழங்கும் விமான நிறுவனம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

உக்ரேனிய ஜனாதிபதியுடன் அமெரிக்கா தொடர்ந்தும் தொடர்பில்
உக்ரேனிய ஜனாதிபதி வொலொடிமெர் ஸெலென்ஸ்கியுடன் அமெரிக்கா தொடர்ந்தும் தொடர்பில் உள்ளதக CNN தகவல் வெளியிட்டுள்ளது.

ரஷ்ய ஆக்கிரமிப்பிற்கு முன்னரே உக்ரேனிய ஜனாதிபதிக்கு அமெரிக்கா விசேட செய்மதித் தொலைபேசி ஒன்றை வழங்கியுள்ளது. மிகவும் பாதுகாப்பானதும், நவீனமயமானதுமான இந்த செய்மதி தொலைபேசி மூலம் உக்ரேனிய ஜனாதிபதி, அமெரிக்க ஜனாதிபதியுடன் கடந்த செவ்வாய்க்கிழமை தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

உக்ரேனிய வெளிவிவகார அமைச்சருக்கும் அதே போன்ற செய்மதி தொலைபேசி ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்கா உக்ரேனிய தலைநகர் கிவ்விலிருந்து வெளியேற முன்னர் மேற்படி செய்மதி தொலைபேசிகளை உக்ரேனுக்கு வழங்கியுள்ளது.

இதேவேளை நாட்டைவிட்டு வெளியேற மாட்டேன் என உறுதியெடுத்துள்ள உக்ரேனிய ஜனாதிபதி, தலைநகர் கிவ்வில் கடும் பாதுகாப்புடன் தனது இருப்பிடங்களை மாற்றி மாற்றி நகர்வுகளை மேற்கொண்டுவருகிறார்.

The post உக்ரேனிய ஜனாதிபதியுடன் அமெரிக்கா தொடர்ந்தும் தொடர்பில் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.