Palaly Airport – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

யாழ்-திருச்சி விமான சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும்! – (f)பிட்ஸ் எயார்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு விரைவில் நேரடி விமான சேவை ஆரம்பிக்கும் திட்டம் இருப்பதாக (f)பிட்ஸ் எயார் விமான சேவை நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பீட்டர் ஹில் தெரிவித்துள்ளார்.

பயணிகளிடமிருந்து கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து தமிழ்நாட்டின் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் கேரளாவின் திருவனந்தபுரம், கொச்சி உள்ளிட்ட தென்னிந்திய நகரங்களுக்கு இலங்கையிலிருந்து விமான சேவைகள் ஆரம்பிக்கபடும் எனவும் அவர் திருச்சியில் இடம்பெற்ற  நிகழ்வில் தெரிவித்துள்ளார்.

(f)பிட்ஸ் எயார் முதன்முதலாக வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி கொழும்பு – திருச்சி இடையேயான விமான சேவையை ஆரம்பிக்கின்றது. வாரத்திற்கு மூன்று சேவைகளை கொழும்பு திருச்சியிடையே (f)பிட்ஸ் எயார் வழங்கவுள்ளது.

இந்திய அரசின் உதவியுடன் பல கோடி ரூபாய் செலவில் புணரமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் (பலாலி விமான நிலையம்), விமான சேவைகள் எதுவும் இடம்பெறாமல் மூடி வைக்கப்பட்டுள்ளது. இது இலங்கை அரசின் ஒரு திட்டமிட்ட சதியாகவே நோக்கப்படுகிறது.

யாழ்-இந்தியா விமான சேவை தொடங்கப்பட்டால், தமிழர் தாயகம் அபிவிருத்தியடைந்துவிடும் என்ற காழ்ப்புணர்ச்சியில், சிங்கள பேரினவாத அரசு பலாலி விமான நிலையத்தை மூடி வைத்துள்ளது. சிங்கள அரசின் இந்த செயலை இந்திய அரசும் இதுவரை கண்டும் காணாமல் இருப்பதுதான் மாபெரும் வேடிக்கையாகும்.

The post யாழ்-திருச்சி விமான சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும்! – (f)பிட்ஸ் எயார் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

தமிழ்நாடு-யாழ்ப்பாணம் சரக்கு படகுச் சேவைக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி
யாழ்ப்பாணம்-தமிழ்நாடு சரக்கு படகுச் சேவைகளுக்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும், தமிழ்நாடு பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களிற்குமிடையிலான சரக்கு படகுச் சேவைக்கே பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர், இந்த படகுச் சேவை மூலம் இலகுவாக அத்தியாவசிய பொருட்கள், உரம் மற்றும் எரிபொருட்களை பெறமுடியுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி படகுச் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படுமென தெரிவித்துள்ள அமைச்சர், ஏற்கனவே திட்டமிட்டபடி யாழ்ப்பாணம்-திருச்சி மற்றும் யாழ்ப்பாணம்-சென்னை விமான சேவைகள் ஜூலை முதலாம் திகதி ஆரம்பிக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

திருக்கேதீச்சரம் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆரம்பிக்கப்படும் யாழ்ப்பாணம்-திருச்சி மற்றும் யாழ்ப்பாணம்-சென்னை விமான சேவைகள் தொடர்ச்சியாக பயணிகள் சேவையில் ஈடுபடுமா என்பது குறித்து எவ்வித தகவல்களும் இல்லை.

பலாலி சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட வேண்டும் – விக்னேஸ்வரன்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்

The post தமிழ்நாடு-யாழ்ப்பாணம் சரக்கு படகுச் சேவைக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பலாலி சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட வேண்டும் – விக்னேஸ்வரன்
பலாலி சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை இந்திய பிரதமரிடம் வட மாகான சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் விஜயம் செய்திருந்த பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை அவர்களுடனான சந்திப்பின்போதே விக்னேஸ்வரன் அவர்கள் மேற்குறித்த வேண்டுகோளை விடுத்திருந்தார்.

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் திறக்கப்பட்ட பலாலி சர்வதேச விமான நிலையம், கொரோனா பரவல் ஏற்பட்ட நாள் முதல் மூடப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில், இந்தியாவின் அழுத்தத்தினால் பலாலி சர்வதேச விமான நிலையம் புணரமைக்கப்பட்டு மீளத் திறக்கப்பட்டது.

இருப்பினும் தமிழர் தாயகத்தில் ஒரு சர்வதேச விமான நிலையம் இயங்குவதை விரும்பாத தற்போதைய ராஜபக்ச ஆட்சியாளர்கள், கொரோனா பரவலைக் காரணம் காட்டி விமான நிலையத்தை வேண்டுமென்றே மூடி வைத்துள்ளனர்.

மேலும் காங்கேசன்துறை துறைமுகமும் திறக்கப்பட்டு, இந்தியாவுடனான வணிகரீதியிலான தொடர்பை மேலும் பலப்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோளையும் விக்னேஸ்வரன் அவர்கள் அண்ணாமலையிடம் விடுத்திருந்தார்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்

The post பலாலி சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட வேண்டும் – விக்னேஸ்வரன் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

54 வருடங்களின் பின்னர் மீண்டும் விமான சேவை
54 வருடங்களின் பின்னர் இலங்கையின் முதல் சர்வதேச விமான நிலையமான இரத்மலானை விமான நிலையத்திலிருந்து மாலைதீவிற்கான விமான சேவைகள் ஆரம்பமாகின்றன என விமான போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி வலய இராஜாங்க அமைச்சர் D.V.ஜானக தெரிவித்துள்ளார்.

மார்ச் 27 முதல் இலங்கைக்கும், மாலைதீவிற்குமிடையிலான பிராந்திய விமான சேவையை மாலைதீவு அரச விமான நிறுவனம் ஆரம்பிக்கின்றது. வாரத்தில் மூன்று நாட்கள் இடம்பெறவுள்ள இவ்விமான சேவை, மே மாதத்தில் இருந்து ஐந்தாக அதிகரிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேற்படி விமான சேவைக்காக, 50 இருக்கைகளைக் கொண்ட டாஷ்-8 விமானம் பயன்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை யாழ் பலாலி சர்வதேச விமான நிலையம் கவனிப்பாரற்று மூடப்பட்டுள்ளமையும் இங்கே சுட்டிக் காட்டப் படவேண்டியுள்ளது. தமிழ் நாட்டிற்கும், யாழ்பாணத்திற்கும் இடையிலான விமான சேவைகள், 2020ல் ஏற்பட்ட கொரோனா பரவலின் பின்னர் மூடப்பட்ட நிலையில் உள்ளது.

அதிக வருமானத்தை ஈட்டித் தரக்கூடிய யாழ்-இந்திய விமான சேவைகள் மீண்டும் ஆரம்ப்பிக்கபடாமை, அரசின் திட்டமிட்ட செயலாக இருக்கலாம் என்ற ஐயப்பாடும் மக்களிடையே ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post 54 வருடங்களின் பின்னர் மீண்டும் விமான சேவை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்
இலங்கையின் பழமைவாய்ந்ததும், வியாபார மற்றும் இராணுவ கேந்திர முக்கியத்துவமானதுமான பலாலி விமான நிலையம், தற்போது யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக மீண்டும் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

பல அரசியல் இழுபறிகளின் பின்னர் ஒருவாறு சிங்கள அரசு பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மீண்டும் தரமுயர்த்துவதற்கு ஒப்புக்கொண்டிருந்தது. பெரும்பாலும் இந்திய அரசின் கடும் அழுத்தம் காரணமாகவே இது சாத்தியப்பட்டுள்ளதுபோலுள்ளது!

இலங்கை வரலாற்றில் அதிக உள்ளூர் பயணிகள் விமானத்தில் பயணம் மேற்கொள்ளவது யாழ்ப்பாணத்திற்கு மட்டுமே. ஒரு காலத்தில், மூன்று தனியார் விமான நிறுவனங்கள் பல விமான சேவைகளை கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கு இடையில் மேற்கொண்டிருந்தன.

அந்தளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த பலாலி விமான நிலையத்தை தரமுயர்த்துவதில் சிங்கள அரசு திட்டமிட்டு இழுத்தடித்து செய்து வந்தது.  நல்லாட்சி அரசு பதவியேற்றபின்னரும் அதே நிலமையே காணப்பட்டது.

நிமால் சிறிபால டிசில்வா போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது, மட்டக்களப்பு விமான நிலையத்தை புணரமைப்பது தொடர்பாக காட்டிய அக்கறை, பலாலி விமான நிலைய புணரமைப்பில் காட்டவில்லை.

ஈஸ்டர் குண்டு வெடிப்பின் பின்னரே ஓரளவு தெரியவந்தது ஏன் சிங்கள அரசினால் மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்று!!

தற்போது மிக மிக அவசரமாக பலாலி விமான நிலையம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக மீண்டும் தரமுயர்த்தப்பட்டு உலகத்திற்கு காட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த நிகழ்வு அரசியல் நாடகத்தின் உச்சக்கட்டமாக பார்க்கப்படுகிறது.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக வெற்றி பெற்றால், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள் தடைப்படலாம் அல்லது மட்டுப்படுத்தப்படலாம். சொல்லப்படும் காரணம் பாதுகாப்பு பிரச்சனை என்பதாக இருக்கும்.

ஏனெனில்,  மகிந்த அரசினால், சீன அரசின் உதவியுடன் உருவாக்கப்பட்ட மத்தள சர்வதேச விமான நிலையத்தில், நல்லாட்சி அரசு பதவியேற்ற சில காலங்களிலேயே நெல்லு காயப்போட்ட நிகழ்வு எல்லோருக்கும் நினைவிருக்கலாம்.

The post யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பலாலி விமான தளத்தை சர்வதேச விமானத் தளமாக மாற்ற வேண்டும் – முதலமைச்சர்
பலாலி விமான தளத்தை சர்வதேச அல்லது பிராந்திய விமானத் தளமாக மாற்ற வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைத்த அறிக்கை ஒன்றிலேயே முதலமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இந்திய அரசாங்கம் கூறியுள்ளபடி மேலதிக காணிகளை சுவீகரிக்காமல், பலாலி விமானத் தளத்தை சர்வதேச, பிராந்திய பாவனைக்காக திறக்க முடியுமென முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

The post பலாலி விமான தளத்தை சர்வதேச விமானத் தளமாக மாற்ற வேண்டும் – முதலமைச்சர் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.