EPDP – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

யாழ் தேர்தல் களம் 2024
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இம்முறை ஆறு ஆசனங்களுக்காக கடும் போட்டி நிலவுகின்றது.

யாழ் தேர்தல் மாவட்டத்தில் சனத்தொகை கணக்கெடுப்பின்படி, கடந்தகால தேர்தல்களில் ஏழு ஆசனங்களாக இருந்து இம்முறை ஆறு ஆசனங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

ஆறு அசனங்களை கைப்பற்றுவதற்கு 23 அரசியல் கட்சிகள் மற்றும் 23 சுயேட்சை வேட்பாளர்கள் என 396பேர் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். ஏறக்குறைய 593,000 மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள யாழ் தேர்தல் மாவட்டத்தில், அளவிற்கதிகமான வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ஒற்றுமையின்மையால் ஏற்பட்டுள்ள பிரதான தமிழ் அரசியல் கட்சிகளின் பிளவும், அதிக சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுவதும் மற்றும் அதிகரித்துச் செல்லும் பிரதான சிங்கள கட்சிகளின் (NPP..) செல்வாக்கும் பாரிய தாக்கத்தை யாழ் தேர்தல் மாவட்டத்தில் ஏற்படுத்தப் போகின்றது.

தமிழரசுக் கட்சி (சின்னம் வீடு)

2015 தேர்தலுடன் ஒப்பிடும்போது 2020இல் பிரதான தமிழ் கட்சியான தமிழரசுக் கட்சி 95,590 வாக்குகளை இழந்திருந்தது. 2020இல் கட்சி இருந்த நிலமையுடன் ஒப்பிடும்போது, 2024இல் கட்சியின் நிலமை மிக சிக்கலான மோசமான நிலமையாகவே உள்ளது. கட்சியின் முக்கிய நீண்ட கால உறுப்பினர்களின் வெளியேற்றம், சுமந்திரனின் ஆதிக்கம், அறிமுகம் குறைந்த புதிய வேட்பாளர்கள், தேசிய மக்கள் சக்தியின் (NPP) எழுச்சி என பல வழிகளிலும் தமிழரசுக் கட்சிக்கு இறங்கு முகத்திற்கான நிலமையே காணப்படுகிறது.

யாழ் மாவட்டத்திற்கான வேட்பாளர்களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஶ்ரீதரன் மட்டுமே வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் காணப்படுகின்றது. இரண்டாம் நிலையில் முன்னாள் யாழ் நகர மேயர் ஆர்னோல்ட் அல்லது சுமந்திரன் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (சின்னம் சைக்கிள்)

2015 தேர்தலுடன் ஒப்பிடும்போது 2020இல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 40,000 இற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மாவட்டரீதியில் இரண்டாம் இடத்தினையும் பெற்றிருந்தது. 2024 தேர்தலில் தமிழரசுக் கட்சியின் உடையும் வாக்குகளில் கணிசமான பங்கு முன்னணிக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. மிகுதி வாக்குகள் தமிழரசுக் கட்சியில் இருந்து பிரிந்த அணியினரின் ஜனநாயக தமிழரசுக் கட்சிக்கும் (மாம்பழம்), விக்னேஷ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணிக்கும் (மான்), சொற்ப அளவில் தேசிய மக்கள் சக்திக்கும் (திசை காட்டி) கிடைக்கும்.

கடந்த தேர்தலில் தீவகம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முன்னணியினர் சிறப்பாக பிரச்சாரத்தை மேற்கொள்ளவில்லை என்பதும் இங்கே சுட்டிக் காட்டப் படவேண்டியது. இருப்பினும் இம்முறையும் கடும் போட்டியின் மத்தியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு ஆசனத்தை யாழ் மாவட்டதில் கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது.

அங்கஜன் அணி(தபால் பெட்டி)

2015 தேர்தலுடன் ஒப்பிடும்போது 2020இல், அங்கஜன் அணி 32,000 இற்கும் அதிகமான வாக்குகள் பெற்று மாவட்டதில் மூன்றாம் இடத்தைப் பிடித்திருந்தனர். இம்முறை தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடும் அங்கஜன், கடந்த தேர்தலில் யாழ் மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் (36,356) பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுனவிற்கு நெருக்கமான ஆள் என பல குழப்பங்கள் யாழ் மக்கள் மத்தியில் இருப்பினும், இவர் மக்களுடன் அனுகும் முறை மற்றும் திறமையான பிரச்சார செயற்பாடுகளினால், இம்முறையும் வெற்றியீட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

EPDP (வீணை)

2015 தேர்தலுடன் ஒப்பிடும்போது 2020இல், EPDP 15,500 இற்கும் அதிகமான வாக்குகள் பெற்று யாழ் மாவட்டத்தில் நான்காம் இடத்தைப் பெற்றிருந்தது. நீண்ட கால (யாழ்) அரசியல் அனுபவம், பலருக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுத்தமை, தீவக வாக்குகள் என டக்ள்ஸ் தேவானந்தாவின் வாக்கு வங்கி மிக உறுதியாக இருக்கிறது. இவரது தெற்கு அரசியல் இராஜ தந்திரங்கள் வடக்கு மண்ணில் பாதிப்பை ஏற்படுத்தாது. எனவே இம்முறையும் டக்ளஸ் தேவானந்தாவும் வெற்றியீட்டுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய மக்கள் சக்தி (திசை காட்டி)

இலங்கை அரசியலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்திய அண்மைய நிகழ்வு இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024. தேசிய மக்கள் சக்தியின் (NPP) வேட்பாளரான அநுர குமார திசாநாயக்கா பெரு வெற்றியீட்டி இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதியாக பதவியேற்றார்.

நாடளாவியரீதியில் தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி இன்னும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இந்த எழுச்சி வடக்கு கிழக்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தப்போவதை, தமிழ்க் கட்சிகள் கட்சி வேறுபாடின்றி தேசிய மக்கள் சக்தியை “சிங்கள” கட்சி எனும் தொனியில் எதிர் பிரசாரங்களை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளமை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி எந்தளவிற்கு யாழில் இருக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. நேர்மையான, இளம் தலைமுறையினரை தேர்தல் களத்தில் இறக்கியுள்ள தேசிய மக்கள் சக்தி, யாழில் உள்ள பல சங்கங்கள், திணைக்களங்கள் மற்றும் பல அமைப்புகளில் தமது செல்வாக்கினை வைத்துள்ளனர்.

மேலும்,மாற்றத்தை விரும்பும் இளம் தலைமுறையினர் மற்றும் பாரம்பரிய தமிழ் அரசியலில் ஏமாற்றம் அல்லது சலிப்படைந்த மக்கள், தேசிய மக்கள் சக்திக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழக்கி பார்க்க முன்வருவார்கள். எனவே இம்முறை தேர்தலில், தேசிய மக்கள் சக்தி ஒரு ஆசனத்தை வெல்லக்கூடும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்குகளைப் போக விடாமல் தடுத்தால், அந்த வாக்குகள் தமக்கு வருமென அனைத்து தமிழ்க் கட்சிகளும் முழுமையாக நம்புகின்றன. எனவே தேசிய மக்கள் சக்திக்கு எதிரான கடுமையான பிரச்சாரங்களை வரும் வாரங்களில் நாம் காணக்கூடியதாக இருக்கும்.

குறிப்பாக இம்முறை தேர்தலில் ஆசனங்களைப் பெறமாட்டார்கள் என நம்பப்டும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (சங்கு சின்னம்), தமிழரசு கட்சியின் மாற்று அணி (மாம்பழ சின்னம்) மற்றும் மதுபான அனுமதிபத்திர விடயத்தில் மிக மோசமாக சேதமடைந்திருக்கும் C.V.விக்னேஷ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி (மான் சின்னம்) ஆகியோரால் தேசிய மக்கள் சக்திக்கெதிரான பிரசாரங்கள் அதிகளவில் முன்னெடுக்கப்படலாம்!

– மாற்றம் ஒன்றே மாறாதது –

பாராளுமன்றத் தேர்தல் 2020
யாழ் மாவட்டம்

The post யாழ் தேர்தல் களம் 2024 appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

EPDP ஆதரவுடன் மணிவண்ணன் யாழ் மேயராக தெரிவு
யாழ் மாநகர சபையின் முதல்வராக மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மாநகர முதல்வர் தெரிவிற்கான வாக்கெடுப்பில் ஈபிடிபி கட்சியின் பத்து உறுப்பினர்களும், சுதந்திர கட்சியின் ஒரு உறுப்பினரும், தமிழ் காங்கிரசின் பத்து உறுப்பினர்களும் மணிவண்ணனிற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஆனோல்ட் இருபது வாக்குகளைப் பெற்று ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஆனோல்ட்டிற்க்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

வாக்கெடுப்பில் தமிழர்சுக்கட்சி உறுப்பினர் ஒருவரும், மற்றும் மூன்று தமிழ் தேசியக் கூட்டணி உறுப்பினர்களும் பங்குபற்றியிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post EPDP ஆதரவுடன் மணிவண்ணன் யாழ் மேயராக தெரிவு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மீண்டும் கடற்றொழில் அமைச்சரானார் டக்ளஸ் தேவானந்தா
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா மீண்டும் அமைச்சரவை அந்தஸ்துள்ள கடற்றொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் யாழ் தேர்தல் மாவட்டத்தில் தனது கட்சியிலேயே போட்டியிட்டு, 32,146 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியிருந்தார்.

மேலும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராகவும் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

The post மீண்டும் கடற்றொழில் அமைச்சரானார் டக்ளஸ் தேவானந்தா appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

யாழ் தேர்தல் மாவட்ட முடிவுகளின் ஒப்பீடு
யாழ் தேர்தல் மாவட்டத்தில் 2015 நாடாளுமன்ற தேர்தலுடன் ஒப்பிடுகையில், 2020 இற்கான நாடாளுமன்ற தேர்தலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி, டக்ளஸ் தேவாந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் அங்கஜன் தலைமையிலான இலங்கை சுதந்திரக் கட்சி ஆகியன மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளன.

இதேவேளை வடமாகாண சபை முன்னாள் முதல்வரான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் போட்டியிட்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி (சின்னம் ) 35,927 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது. குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியையும் யாழ் மக்கள் அங்கீகரித்து ஒரு ஆசனத்தைப் பெறச் செய்துள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

2015 நாடாளுமன்ற தேரத்லுடன் ஒப்பிடும்போது, யாழ் தேர்தல் மாவட்டத்தில் மட்டும் இலங்கை தமிழரசுக் கட்சி 94,590 வாக்குகளை இழந்துள்ளது. இது ஒரு மாபெரும் இழப்பாகும்.

நல்லாட்சி அரசின் முழு ஆசீர்வாதம் இருந்திருந்தும் எதையுமே மக்களுக்குப் பெரிதாகச் செய்திராமை, பழைய வேட்பாளர்களே தேர்தலில் மீண்டும் போட்டியிட்டமை, இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்காமை போன்ற காரணங்களால் இம்முறை மக்களின் மனங்களை அவர்களால் வெல்ல முடியாமல் போயுள்ளது.

தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி

தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி (சின்னம் ) பல சவால்களின் மத்தியில் போட்டியிட்டு, யாழ் தேர்தல் மாவட்டத்தில் 55,303 வாக்குகளப் பெற்று ஒரு ஆசனத்தையும் வென்றது. 2015 தேர்தலுடன் ஒப்பிடும்போது, இது ஏறக்குறைய 268% அதிகரிப்பாகும். அவர்களைப் பொறுத்தமட்டில் இது ஒது இமாலய சாதனையாகும். மேலும் தேசிய பட்டியலிலும் ஒரு ஆசனத்தை வென்று, மொத்தமாக இரு ஆசனக்களைக் கைப்பற்றி தம்மை மிகவும் வலுப்படுத்தியுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டம் மற்றும் ஊர்காவற் தொகுதி (தீவகப் பகுதிகளில்) தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி பெரிதாக வாக்குகளைப் பெறவில்லை. அவர்கள் பிரச்சார நடவடிக்கைகளை ஒழுங்காக முன்னெடுக்கவில்லையோ எனத் தோன்றுகிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் வெறும் 2,528 வாக்குகளையே பெற்றுள்ளார்கள். இதேவேளை ஊர்காவற்துறை தொகுதியில் 1,376 வாக்குகளையே பெற்றுள்ளார்கள்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி 31,156 வாக்குகளைப் பெற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைப் பொறுத்த மட்டில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் ஒரு நிலையான வாக்கு வங்கி உள்ளது. இருப்பினும் அக்கட்சியின் முன்னாள் நாடாளமன்ற உறுப்பினரான முருகேசு சந்திரகுமார் இம்முறை தனித்து சுயாதீனமாகப் போட்டியிட்டதால், வாக்கு வங்கியில் சரிவு வருமென எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இம்முறை 45,797 வாக்குகளைப் பெற்றுள்ளனர. இது 2015 பெற்ற வாக்குகளை விட 51.4% அதிகமாகும்.

சந்திரிக்கா மற்றும் மகிந்த அரசில் அங்கம் வகித்த டக்ளஸ் தேவானந்தாவினால் அபிவிருத்தி என பெரிதாக எதையும் செய்ய முடியாது போயிருந்தாலும், பல இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினைப் பெற்றுக் கொடுத்திருப்பதனால், அவரது வாக்கு வங்கியில் எப்போதும் வீழ்ச்சி வரப்போவதில்லை.

அங்கஜன் இராமநாதன்

இலங்கை சுதந்திரக் கட்சி உறுப்பினரான அங்கஜன் இராமநாதன் கை சின்னத்தில் () நின்று யாழ் மாவட்டத்தின் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் (36,356) பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் சுதந்திரக் கட்சி உறுப்பினராக இருப்பினும், இவரை இப்போது வழி நடத்துவது மகிந்த அணியா (பொதுஜன பெரமுன) அல்லது சுதந்திரக் கட்சியா என தெரியவில்லை.உயர் அரச செல்வாக்கு மற்றும் பணபலம் இருப்பதனால் அங்கஜனால் பிரச்சாரங்கள் மிகத் திறமையாக முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் தனித்து நின்று சிறப்பாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்.

இம்முறை யாழ் தேர்தல் மாவட்டத்தில் சுதந்திரக் கட்சி 49,373 வாக்குகளைப் பெற்றிருந்தது. இது 2015 தேர்தலுடன் ஒப்பிடும்போது, ஏறக்குறைய 185% அதிகரிப்பு. ஒரு பழம்பெரும் தேசியக் கட்சி தனித்துப் போட்டியிட்டு ஒரு ஆசனத்தை வென்றது யாழில் மட்டுமே!! அதுவும் முற்றுமுழுதாக தமிழ் வாக்குகள் மூலம் கிடைத்த வெற்றி. இதற்கு பிரதியுபகாரமாக அங்கஜன் நல்லது செய்வாரென்று நம்புவோமாக.

இனிவரும் காலங்கள் பல சவால்கள் நிறைந்தவையாக அமையப் பெறும். கொரோனா தாக்கத்தினால் உலகமே தலை கீழாகப் போயுள்ளது. அபிவிருத்தியடைந்த நாடுகள் பாரிய பொருளாதார பின்னடைவுகளை எதிர்கொண்டுள்ளன. இலங்கைக்கு கிடைக்கும் உதவிகளின் எண்ணிக்கையில் பல மடங்கு வீழ்ச்சி ஏற்படும். இதனால் அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்பில் தடங்கல்கள் ஏற்படும். ஆகவே தன்னிறைவான பொருளாதாரத்திற்கான வழிவகைகளைக் கண்டறிந்து யாழ் முதல் காலிவரை அதனை ஊக்குவித்து, மேம்படுத்தினால் மட்டுமே இலங்கை அபிவிருத்தியடையும். இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பும் மிக மிக அவசியம்.

The post யாழ் தேர்தல் மாவட்ட முடிவுகளின் ஒப்பீடு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

தேர்தலில் EPDP, பொதுஜன பெரமுன மற்றும் அங்கஜன் அணியைப் புறக்கணித்த மக்கள்
நேற்று (16/11) இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட கோத்தபாய ராஜபக்ச வட இலங்கையில் பெரிதாக வாக்குகளைப் பெற முடியவில்லை. இவருக்கு ஆதரவாக EPDP, பொதுஜன பெரமுனவின் யாழ் அணி மற்றும் அங்கஜன் அணியினர் கடுமையான தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தனர்.

யாழ் பாராளுமன்ற உறுப்பினர்களான EPDP தலைவர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இலங்கை சுதந்திரக் கட்சியின் அங்கஜன் ஆகியோர் நேரடியாக களத்தில் இறங்கி பரவலான பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தபோதும் மக்களின் மனங்களை வெல்ல முடியவில்லை.

2015 இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் யாழ் மாவட்டத்தில் மகிந்தவிற்காக பிரச்சாரம் செய்த டக்ளஸ் தேவானந்தவினால் 74,454 வாக்குகளை பெற முடிந்திருந்தது. இருப்பினும் 2019இல் பெரும் அணியாக (டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் மற்றும் பொதுஜன பெரமுன யாழ் அணி) செயற்பட்டும் இவர்களால் வெறும் 23,261 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

இதேவேளை வன்னி மாவட்டங்களில் கடந்த 2015 இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மகிந்த 34,377 வாக்குகளைப் பெற்றிருந்தார். ஆனால் இம்முறை கோத்தபாய ராஜபக்சவினால் 26,105 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

மேற்குறித்த நிகழ்வுகள் EPDP, பொதுஜன பெரமுன மற்றும் அங்கஜன் அணியை வடபகுதி மக்கள் முற்றாகப் புறக்கணித்துள்ளார்கள் என்பதை மிகத்தெளிவாகக் காட்டுகிறது.

The post தேர்தலில் EPDP, பொதுஜன பெரமுன மற்றும் அங்கஜன் அணியைப் புறக்கணித்த மக்கள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இந்து விவகார, வடமாகாண அபிவிருத்தி அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா
இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள புதிய அமைச்சரவையில் டக்ளஸ் தேவானந்தா முக்கிய அமைச்சுப் பதவியொன்றைப் பெற்றுள்ளார்.

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு,  வடமாகாண  அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா பதவியேற்றுள்ளார்.

ஆரம்பகாலம் முதல் எவ்வித நிபந்தனைகளுமின்றி மஹிந்தவிற்கான தனது ஆதரவினை தெரிவித்துவரும் டக்ளஸ் தேவானந்தாவிற்கு, மஹிந்த பெரும் அமைச்சுப் பதவியை வழங்கியள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில், வட பகுதி மக்களின் மனங்களை வெல்ல மஹிந்த தரப்பு என்ன செய்யப்போகின்றது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

The post இந்து விவகார, வடமாகாண  அபிவிருத்தி அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

வீடும் வீணையும்
கடந்த உள்ளூராட்சி தேர்தலின்போது வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு (வீடு), தமிழ் தேசிய மக்கள் முன்னணி (சைக்கிள்), ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈபிடிபி/வீணை) போன்ற தமிழ் அமைப்புக்கள் பெரும்பாலான வாக்குகளைப் பெற்றிருந்த போதிலும் எந்த ஒரு சபையிலும் அவர்களால் தனித்து ஆட்சி அமைக்கும் நிலையைப் பெற்றிருக்க முடியவில்லை.

இதனால் பெரும்பாலான சபைகளில் ஈபிடிபியின் ஆதரவுடன் கூட்டமைப்பு ஆட்சி அமைத்தது. ஆட்சி அமைப்பு/தவிசாளர் தெரிவு செய்திகளை மட்டும் சில உள்ளூர் பத்திரிகைகளும், சில இணைய ஊடகங்களும் எதோ கூட்டமைப்பு தனித்து சபைகளைக் கைப்பற்றியதுபோன்று செய்தி வெளியிட்டிருந்தன.

தேர்தல் என்றால் வீட்டிற்குதான் தமது வாக்கு என்பவர்களில் பலர் (பெரும்பாலும் 50,55 வயதிற்கு மேற்பட்டவர்கள்) தமது வாக்குகளை வீட்டிற்கு வழங்கியிருந்தனர்.

பெரும்பாலான இளவயதுக்காரர்கள், மாணவர்கள், முதல்வர் விக்னேஸ்வரனின் ஆதரவாளர்கள் மற்றும் மாற்றத்தை விரும்பும் பலர் சைக்கிளுக்கு வாக்களித்திருந்தனர். இந்த தேர்தலில் சைக்கிளின் வாக்கு வாங்கி கணிசமாக உயர்ந்துள்ளது. இதை தக்க வைக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி மிக கடுமையாக உழைக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இம்முறை தேர்தலில், குறைந்த பிரச்சார நடவடிக்கைகளுடன், உண்மையான வாக்குகளை மட்டும் பெற்று (கள்ள ஓட்டு போடாமல்), வீட்டிற்கும், சைக்கிளுக்கும் சவால் விடும் வகையில் வீணையின் (ஈபிடிபி) பல உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருந்தனர். வீணைக்கு கிடைத்த பெரும்பாலான வாக்குகள், அக்கட்சியின் மூலம் தொழில்வாய்ப்பு பெற்றவர்கள் மற்றும் கூட்டமைப்பின் செயற்பாட்டில் சலிப்புற்றவர்களாலும் கிடைக்கப்பெற்றதாகும். வெளிப்படையாகக் கூறின் வாழ்வாதாரத்திற்கு தேவையான தொழில் துறைகளை வழங்கியதற்காக, மக்கள் நன்றியுடன் ஈபிடிபிக்கு வாக்களித்துள்ளனர்.

எவரும் தனித்து ஆட்சி அமைக்க முடியாமல் போனதால், தமிழரசுக்கட்சியின் உயர்பீடம் ஈபிடிபியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும் முடிவிற்கு வந்தது. கட்சியின் உயர் மட்டத்தினர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பேச்சுக்களை தொலைபேசியூடாக நடத்தி, ஆட்சி அமைக்க ஆதரவைப்பெற்றுள்ளனர். அதன்படி பெரும்பாலான சபைகளில் கூட்டமைப்பு ஆட்சி அமைத்துள்ளது.

தமிழரசுக்கட்சி ஈபிடிபியுடன் இணைத்து ஆட்சி அமைக்க இந்திய கொள்கை வகுப்பாளர்களின் அழுத்தம் காரணமாக இருந்திருக்கலாம். இதற்கு நல்லாட்சி அரசும் துணை போயிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில், வீடும் வீணையும் இணைந்தால் சைக்கிள் ஓட முடியாமல் போகும், அதாவது தமிழ் தேசிய மக்கள் முன்னணி வினைத்திறன் அற்றதாகிவிடும் என்பதுதான் அவர்களின் (கொள்கை வகுப்பாளர்களின்) கணக்காக இருந்திருக்கும்.

இன்னும் சில மாதங்களில் வரவிருக்கும் வட மாகாண சபை தேர்தலில் தமிழ் கூட்டமைப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடமிருந்து பலத்த போட்டியை எதிர்கொள்ளும். இப்பொழுதிலிருந்தே வீடு வீணையுடன் சேர்ந்து பயணித்தால், மாகாண சபை தேர்தலிலும் சைக்கிளை ஓரம் கட்டலாம் என்பதுதான் உள் நோக்கம்.

எது எவ்வாறு இருப்பினும் கடந்தகால தேர்தல்களில் வட மாகாண மக்கள் வீட்டிற்கு அளித்து வந்த ஆதரவு அலை, வரும் காலங்களில் சைக்கிளின் பக்கம் திரும்ப சாத்தியங்கள் அதிகமுண்டு.

இதனால் கூட்டமைப்பும் எந்த கட்சியுடனும் கூட்டு வைக்கவும் சாத்தியங்கள் அதிகமுண்டு.

The post வீடும் வீணையும் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.