Dr Archchuna – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

யாழ்ப்பானம் தேர்தல் மாவட்ட விருப்பு வாக்குகள் விபரம்
2024 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி நாடு முழுவதும் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

யாழ் தேர்தல் மாவட்டத்திலும் 80,830 வாக்குகளைப் பெற்று மூன்று ஆசனங்களை வென்றுள்ளது தேசிய மக்கள் சக்தி. பாரம்பரிய தமிழ் கட்சியான தமிழரசுக் கட்சி ஒரு ஆசனத்தையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு ஆசனத்தையும், வைத்தியர் அர்ச்சுனாவின் சுயேட்சைக் குழு ஒரு ஆசனத்தையும் வென்றுள்ளன.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இம்முறை தோல்வியடைந்துள்ளனர்.

இதேவேளை வைத்தியர் அர்ச்சுனாவுடன் இணைந்து போட்டியிட்ட சட்டத்தரணி கெளசல்யா 15,789 வாக்குகளைப் பெற்றிருந்தார். சுமந்திரன் (15,039 வாக்குகள்) மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (15,135 வாக்குகள்) ஆகியோர் பெற்ற வாக்குகளைக் காட்டிலும் கெளசல்யா பெற்ற வாக்குகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ் தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சிவஞானம் சிறீதரன் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். வெற்றி பெற்ற வேட்பாளர்களின்  முழுமையான விருப்பு வாக்குகள் விபரம் இதோ.

The post யாழ்ப்பானம் தேர்தல் மாவட்ட விருப்பு வாக்குகள் விபரம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அர்ச்சுனாவைக் கண்டு அஞ்சுவது யார்?
யாழ் மாவட்ட தேர்தல் களத்தில் பிரச்சாரப் பணிகள் கடும் வேகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. பழைய கட்சிகள்/அணிகள் (வீடு, சங்கு, மாம்பழம்) மெத்தனமாக இருக்கும்போது,  மற்றைய கட்சிகள், சுயேட்சை அணிகள் கடுமையாக பிரச்சாரப் பணிகளில் ஈடுபடுவதைக் காணக்கூடியதாக உள்ளது.

வடக்கு கிழக்கு தமிழர்களின் வாக்குகளை வைத்து பல காலமாக பழைய அரசியலை செய்து வரும் கட்சிகளுக்கு இம்முறை தேசிய மக்கள் கட்சி, சுயேட்சைக் குழுக்கள்(குறிப்பாக வைத்தியர் அர்ச்சுனா) என பல சவால்கள் களத்தில் காத்திருக்கின்றன.

பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அநுரவின் தேசிய மக்கள் சக்தி கட்சியின் மீதான வடக்கு மக்களின் ஆதரவை கடுமையாக விமர்சித்திருந்தார். வட பகுதியில் ஓரளவு கட்டுக்கோப்புடன் பயணித்துக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையே திசைகாட்டியின் மக்கள் ஆதரவு சற்று அசைத்துப் பார்த்துள்ளது என்பதற்கு இது ஒரு சான்றாகும் என்பதுடன், தமது வாக்குகள் உடையப் போவதை அவர் திறம்படக் கணித்து விட்டார் என்றே தோன்றுகின்றது.

தேசிய மக்கள் சக்தியின் எழுச்சிக்கு ஒப்பான ஒரு எழுச்சியை, வைத்தியர் அர்ச்சுனாவின் சுயேட்சை குழு 17 உம் வடபகுதியில் ஏற்படுத்தியுள்ளதோ என எண்ணத் தோன்றுகின்றது. தொடர்ச்சியான முகநூல் நேரடி காணொளிகள் மற்றும் பதிவுகள் மூலம் 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார் அர்ச்சுனா. பல உள்ளூர் YouTube தள இளைஞர்களும் அர்ச்சுனாவின் பிரச்சார பணிகளுக்கு பக்கபலமாக உள்ளனர். அர்ச்சுனாவும் இயன்றளவிற்கு அனைத்து உள்ளூர் YouTube தளங்களுக்கும் பேட்டியளித்து வருகின்றார். இவ்வாறானதொரு மக்களுடனான நெருங்கிய ஈடுபாட்டை எந்தவொரு அரசியல் கட்சிகளும் இதுவரை காட்டியதில்லை.

இந்த நிலையில் அண்மையில் தமிழ் மக்கள் கூட்டணியின் (மான் சின்னம்) வேட்பாளர் மிதிலைச் செல்வியுடன் ஏற்பட்ட சிறிய வாக்குவாதத்தினை அர்ச்சுனா முகநூல் காணொளியில் நேரடியாக ஒளிபரப்பியிருந்தார். அந்த நிகழ்வு தொடர்பாக அர்ச்சுனாவை பலர் கண்டித்திருந்த போதும், பலர் மிதிலைச் செல்வியையும் கண்டித்திருந்தனர். (இந்த நிகழ்வு தற்செயலான நிகழ்வா அல்லது வேண்டுமென்றே நடத்தப்பட்ட நிகழ்வா என உறுதிபடத் தெரியவில்லை)

“பெண்” என்ற கருத்தை முன்னிலைப்படுத்தி, அர்ச்சுனா ஒரு பெண்ணை அவமதித்து விட்டார் என்ற கோணத்திலும் ஊடக சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன. அவர்கள் சொல்வதைப் போல “பெண்” என்ற கருத்தை எடுத்தால், ஒரு பிரச்சனை இடம்பெறும் இடத்தில் ஏன் அந்த பெண்மணி அவ்வளவு நேரம்  இருந்த்தார்?, “துஷ்டரைக் கண்டால் தூர விலகு” என்பது போல, அந்த பெண்மணியும் விலகியிருக்க வேண்டுமல்லவா? போன்ற கேள்விகள் எழுகின்றன.

மிதிலைச் செல்வி தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளை உறுப்பினராக இருந்தவர். கொழும்பில் தமிழரசுக் கட்சி போட்டி போடுவதாக தெரிவித்து, கடைசி நேரத்தில் தவிர்த்திருந்தது. இதனால் விசனமடைந்த மிதிலைச் செல்வி யாழில் போட்டியிட விண்ணப்பித்திருந்தார். யாழ்ப்பாணத்தில் சுமந்திரனின் அணி தயார்படுத்தப்பட்டதால், மிதிலைச் செல்வியின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் மாவை சேனாதிராஜாவை நேரில் சென்று சந்தித்தும், சுமந்திரனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் எவ்வித பலனும் ஏற்படவில்லை.  எனவே இவர் உடனடியாகவே விக்னேஷ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியில் (மான் சின்னம்) ஐக்கியமானார். இவர் தாய்க் கட்சிக்கு உண்மையாக இருந்திருந்தால், தமிழரசுக் கட்சியிலிருந்து பிரிந்து மாம்பழ சின்னத்தில் போட்டியிடும் தவராசா அணியில் அல்லவா இடம்பெற்றிருக்க வேண்டும்??

மேலும், ஏற்கனவே அபலைப் பெண்ணிற்கு மதுபான நிலைய அனுமதிப் பத்திரம் (பார் லைசென்ஸ்) கொடுத்த விக்னேஷ்வரன் போன்று, மிதிலைச் செல்வியும் ஒரு கொழும்பு வரவு. கடந்த தேர்தல் போன்று இம்முறை தமக்கு வாக்குகள் கிடைக்கப் பெறாது என்பது மான் கட்சியினருக்கு நன்றாகத் தெரியும். இதனால் கொழும்பு ஸ்ரைலில் “பெண்ணியம்” பேசி வாக்குகள் சேர்க்க முடிந்தளவு முயற்ச்சி செய்கிறார்கள் போலுள்ளது.

மணிவண்ணன் மற்றும் பார்த்திபன் போன்றவர்களின் துரதிஷ்டமோ என்னவோ, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து பிரிந்து, இப்போ மானிடம் மாட்டி தமது வெற்றியை தாமே  கேள்விக்குறியாக்கியுள்ளனர். இவர்கள் சுயேட்சையாகக் போட்டியிட்டிருந்தால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாக இருந்திருக்கலாம்.

தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போன்றன தேசிய மக்கள் சக்திக்கு எதிராக மட்டுமே கருத்துக் கூறி வாக்குச் சேர்ப்பார்கள். ஆனால் மான் கட்சியினர் தேசிய மக்கள் சக்திக்கு எதிராகவும், அர்ச்சுனாவிற்கு எதிராகவும் கருத்துக் கூறி வாக்கு சேர்க்கப் பார்ப்பார்கள். இங்கே சிக்கல் என்னவெனில் தேசிய மக்கள் சக்தி சிங்கள தேசிய கட்சி என்றரீதியில் மக்கள் தவிர்த்தாலும், அர்ச்சுனாவை அவ்வாறு தவிர்க்க மாட்டார்கள். எனவே அர்ச்சுனாவிற்கெதிராக இவர்கள் எது செய்ய முற்பட்டாலும் அது அவர்களையே திருப்பத் தாக்கும் சந்தர்ப்பம் அதிகம் உண்டு என்பதை மான் கட்சியினர் புரிந்துகொண்டால் சரி.

The post அர்ச்சுனாவைக் கண்டு அஞ்சுவது யார்? appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அர்ச்சுனாவின் வெற்றிக் கனவு
வைத்தியர் அர்ச்சுனா பற்றிய அறிமுகம் தமிழ் மக்களுக்குத் தேவையில்லை. உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் பல மக்களின் மனதில் இடம்பிடுத்துள்ள அர்ச்சுனா, 2024 பாராளுமன்றத் தேர்தலில் சுயேட்சை குழுவாக யாழ் தேர்தல் மாவட்டத்தில் களம் இறங்குகின்றார்.

படித்த-புதிய-இளம் வேட்பாளர்களுடன் சுயேட்சைக் குழு இலக்கம் 17இல், ஊசி (syringe) சின்னத்தில் போட்டியிடுகின்றார்.

வைத்தியர் அர்ச்சுனாவின் அதிரடியான சில பல செயற்பாடுகள் மக்களை நேரடியாக சென்றடைகின்றன. உள்ளூர் மற்றும் வெளிநாடுகளிலுள்ள நம்மவர்கள், குறிப்பாக தாய்மார்கள் மற்றும் அநீதிக்கு எதிரானவர்கள், நல்லது நடக்க வேண்டும் என ஏங்குபவர்களின் ஆதரவை அர்ச்சுனாவின் சுயேட்சைக் குழு பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

அர்ச்சுனா சமூக வலைத்தளங்களை மிகவும் திறமையாகக் கையாளுகின்றார். நேரடியாகவும், சமூக வலைத்தளங்களினூடாகவும் மக்களுடன் நேரடித் தொடர்பாடலைப் பேணி வருவதால், மக்கள் மத்தியில் அர்ச்சுனாவின் புகழ் மெதுமெதுவாக உயர்வடைந்து செல்கின்றது.

எப்படியாவது உண்மையை மக்களுக்கு நேரடியாக வெளிப்படுத்த வேண்டுமென்பதற்காக அர்ச்சுனா மாற்றி மாற்றி பல விடயங்களை முகநூல் நேரடிக் கானொளிகளில் பேசி வந்ததினால், பலருக்கு ஒரு குழப்பமான மற்றும் சலிப்புத் தன்மையான பார்வை அர்ச்சுனா மீது ஏற்பட்டிருந்தது.

இன்றைய காலகட்டத்தில் நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால், சாதாரண பதிவுகள் (posts), படங்கள்(photos), வீடியோக்களைக் காட்டிலும் நேரடிக் கானொளிகள் (live video) மட்டுமே சிறந்த சான்று/சாட்சியாக உள்ளதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதனால்தான் அர்ச்சுனா இயன்றளவு எல்லாவற்றையும் நேரடிக் காணொளிகளில் பதிவிட்டு வருகிறார். உண்மையில் அர்ச்சுனாவை நோக்குவதை விடுத்து, அவர் கதைத்த/கதைக்கின்ற  விடயங்களை உற்று நோக்கினால், அதில் ஏதோ ஒரு உண்மை இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

அர்ச்சுனா முகநூலில் உண்மைகளைக் கதைக்கும்போது ஏளனம் செய்தவர்கள், அவர் பாராளுமன்றில் கதைக்கும்போது ஏளனம் செய்ய முடியாது. பாராளுமன்றில் பேசப்படும் ஒவ்வொரு சொற்களும் பாராளுமன்ற பதிவேட்டில் ஏற்றப்படும்.

இவ்வாறானதொரு நிலையில் அண்மையில் இடம்பெற்ற அர்ச்சுனாவின் கைது மற்றும் அவரது சிறைவாசம் மக்கள் மத்தியில் அவரின் செல்வாக்கை மேலும் ஒருபடி உயர்த்தியுள்ளது. உண்மையை சொல்ல வேண்டுமானால் அவரது கைது மற்றும் சிறைவாசத்தின் பின்னர் நல்லதே நடைபெற்றுள்ளதாகக் கருதவேண்டியுள்ளது. சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் தேவையற்ற பேச்சுகள் மற்றும் நேரடி கானொளிகள் குறைவடைந்துள்ளதுடன், அர்ச்சுனாவும் சற்று சுறுசுறுப்புடன் செயற்பட ஆரம்பித்துள்ளார்.

ஒரு சாதாரண மனிதனுக்கு அரசியல் தீர்வு, தமிழ்த்தேசியம் போன்றவற்றிலும் பார்க்க, பக்கத்து தெருவில் நடக்கும் நிகழ்வு/பிரச்சனை மிக முக்கியம்/ஆபத்தானது. சாவகச்சேரி வைத்தியசாலைப் பிரச்சனையின்போது தமிழ்த் தேசியம் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்கே இருந்தார்கள்? (டக்ளஸ் தேவானந்தா தவிர)
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தமது மாவட்டத்தில் நடக்கும் பாரிய மோசடிகள்/முறைகேடுகள் பற்றிக் கேட்பதற்கு உரிமை அல்லது அதிகாரம் இல்லையா???? சாதாரண விதானைமார் செய்யும் மோசடிகளைக் கூட கேட்கும் திராணியற்றவர்களாகதான் நம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள்.

மேலும் தற்போதைய யாழ் தேர்தல் கள நிலவரத்தின்படி, பல கட்சிகள் சுயேட்ச்சைக் குழுக்கள் என 396 பேர் போட்டியிடுவதால் வாக்குகள் நாலா திசைகளிலும் சிதறும் நிலை காணப்படுகின்றது. இந்நிலையில் அர்ச்சுனாவின் சுயேட்சைக் குழு இன்னும் சற்று முழு வீச்சுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டால், கடந்த 2020 தேர்தலில் C.V.விக்னேஷ்வரன் ஒரு ஆசனத்தைப் பெற்றது போன்று, அர்ச்சுனாவும் ஒரு ஆசனத்தைப் பெற அதிக வாய்ப்புள்ளது!

The post அர்ச்சுனாவின் வெற்றிக் கனவு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

திசைகாட்டி வேட்பாளர்களும் தமிழர்களே
வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விருப்பு எண்கள் வழங்கப்பட்டுள்ளது. பிரச்சாரப் பணிகள் களைகட்டத் தொடங்கியுள்ளன.

தேசிய அரசியலில், சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (சின்னம் தொலைபேசி) மிக சுறுசுறுப்புடன் பிரச்சாரப் பணிகளை முன்னெடுத்துள்ளது. இதேவேளை ஜனாதிபதி அநுரவின் தேசிய மக்கள் சக்தியும் (சின்னம் திசைகாட்டி) மிகுந்த நம்பிக்கையோடும், எதிர்பார்ப்புடனும், எப்படியாவது மூன்றில் இரண்டு பெரும்பாண்மையைப் பெற்றிட வேண்டுமென்ற உற்சாகத்துடன் பிரச்சாரப் பணிகளை ஆரம்பித்துள்ளது.

ஆறு ஆசனங்களைக் கொண்ட யாழ் தேர்தல் மாவட்டத்தில், வழமைபோல் ஒற்றுமை இல்லாமலும், சுயநலத்துடனும் பல கட்சிகள், சுயேட்சை குழுக்கள் என பல திசைகளிலும் சிதறி, ஆகக் கூடியது 593,000 வாக்குகளை இலக்கு வைத்து, 396 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

தற்போது பாராளுமன்றில் யாழ் தேர்தல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஆசனங்களைக் கொண்டுள்ள இலங்கை தமிழரசுக் கட்சி (வீடு), தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (சைக்கிள்), EPDP, C.V.விக்னேஷ்வரன்  மற்றும் அங்கஜன் அணி போன்ற செல்வாக்கு மிக்க கட்சிகள் இம்முறை தேர்தலில் பாரிய சவால்ளை எதிர்கொள்ளப் போவதுடன், சில ஆசனங்களை இழக்கும் சந்தர்ப்பங்களும் உண்டு!

தேசிய மக்கள் சக்தி (சின்னம் திசைகாட்டி) மற்றும் வைத்தியர் அர்ச்சுனாவின் சுயேட்சைக் குழு 17 (சின்னம் ஊசி) போன்றவற்றிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு மெது மெதுவாக உயர்ந்து செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது.

தேசிய மக்கள் சக்தியினருக்கு(NPP) நாடு முழுவதும் எழுந்துள்ள மக்கள் ஆதரவு பிரதான தமிழ்க் கட்சிகளை பாரிய அளவில் கலங்க வைத்துள்ளதை மறுப்பதற்கில்லை.
தேசிய மக்கள் சக்தி ஒரு சிங்களப் போக்கு சக்தி எனவும்,
தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி ஒரு மாயை எனவும்,
அவர்களால் ஊழலை இல்லாமல் செய்ய முடிந்தாலும் தமிழருக்கான தீர்வினைத் தர முடியாது எனவும்,
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் தமிழினத்தின் கோடாரிக் காம்புகள் எனவும் கூறுமளவிற்கு தமிழ்க் கட்சிகள் கதிகலங்கிப் போய் உள்ளனர்.

சிங்கள மக்கள் 40,50 வருடங்களின் பின்னர், தமது எதிர்கால நலன் கருதி அரசியலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். அதாவது சிங்கள மக்கள் காலத்திற்கேற்ற வகையில் பொதுநலத்துடன் சிந்தித்து  வாக்களித்துள்ளார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்காவிற்கு வாக்களிக்கவில்லை. தமிழர்களை அநுரவிற்கு வாக்களிக்க விடாமல் திசை திருப்பிய பாரம்பரிய தமிழ்க் கட்சிகள், வடக்கு கிழக்கு தமிழர்களை ஒரு அடி மட்டத்தில் வைத்திருப்பதில் வெற்றி கண்டுள்ளார்கள்.

வடக்கு கிழக்கில் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிடுபவர்களும் தமிழர்களே என்பதை பாரம்பரிய தமிழ்க் கட்சிகள் உணரத் தயாராகவில்லை. இதற்கு அவர்களது ஈகோ ஒரு காரணமாக இருக்கலாம். அதிகம் செல்வாக்கு இல்லாத, படித்த, நேர்மையான, இளம் வேட்பாளர்களை அக்கட்சி இம்முறை தேர்தலில் நிறுத்தியுள்ளது. அவர்ளுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கிப் பார்ப்பதினால், தமிழர்கள் எதையுமே இழந்து விடப்போவதில்லை. (இருந்தால்தானே இழப்பதற்கு) மேலும் சந்தர்ப்பம் வழங்காமல் நாம் யாரையும் எடை போடவும் முடியாது.

கடந்த பல தேர்தல்களில், பாரம்பரிய தமிழ்க் கட்சிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இராணுவ தளபதி சரத் பொன்சேகா மற்றும் ஆட் கடத்தல், கப்பம் பெற்றவர்கள் என பல முன்னாள் ஆயுதக் குழுக்களுக்கு தமிழர்கள் வாக்களித்த சந்தர்ப்பங்களும் உண்டு. இவற்றின் அடிப்படையில் போலித் தமிழ்த் தேசியம், தமிழருக்கான தீர்வு போன்ற மயக்கும் வாசகங்களுடன் வரும் வேட்பாளர்களைப் புறக்கணித்து, தமிழ் மக்கள் வரும் தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

– உங்கள் வாக்கு உங்கள் பலம் –

The post திசைகாட்டி வேட்பாளர்களும் தமிழர்களே appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அதிரடி காட்டும் அர்ச்சுனா
வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் வைத்தியர் அர்ச்சுனாவின் தலைமையில் படித்த இளம் புதிய வேட்பாளர்கள் களம் இறங்குகின்றனர்.

சுயேட்சைக் குழு 17ம் இலக்கத்தில் “ஊசி“(syringe) சின்னத்தில் அர்ச்சுனா அணியினர் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர்.

வேட்பாளர்கள் விபரம்,
Dr.R.அருச்சுனா
பவித்திரா.K (ஆசிரியர்)
கௌசல்யா.N (சட்டத்தரணி)
பத்மலோஜினி.N (மொழிவளவாளர்)
S.மயூரன் (பொறியியலாளர்)
S.யோகபாலன் (மென் பொறியியலாளர்)
S.சிறிபிரகாஷ் (வியாபாரம்)
R.அறிவன்பன் (ஆசிரியர்)
T.கிருஷ்ணானந் (நிர்வாக இயக்குனர்)

The post அதிரடி காட்டும் அர்ச்சுனா appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.