ITAK – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

தமிழரசுக் கட்சியின் அண்மைக் கால நடவடிக்கைகளால் மிகவும் மன உளைச்சலில் இருந்த மாவை, அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார். கடந்த புதன்கிழமை (29/01/2025) இயற்கை எய்திய மாவை சேனாதிராஜாவின் பூதவுடலிற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கா உட்பட பல அரசியல்வாதிகள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

The post மாவையின் உடல் தீயுடன் சங்கமம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

தேசிய பட்டியல் ஆசனம் தோல்வியுற்ற சத்தியலிங்கத்திற்கு, மன்னார் புறக்கணிப்பு
தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் ஆசனத்தை வவுனியாவில் போட்டியிட்டு தோல்வியுற்ற சத்தியலிங்கத்திற்கு வழங்க தமிழரசுக் கட்சி முடிவு செய்துள்ளதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இளையவர்களை உள்வாங்குவதாக தெரிவித்து போட்டியிட்ட தமிழரசுக் கட்சி, இறுதியில் தமக்கு விசுவாசமானவர்களை முன்னுரிமைப்படுத்தும் வகையில் நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றது. மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட இளம் சட்டத்தரணி செ.டினேசன் சத்தியலிங்கத்தை விட 2,500 இற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தும், தமிழரசுக் கட்சி அவரைப் புறக்கணித்துள்ளது.

கடந்த 2020 பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்ட பிரதிநிதித்துவத்தை காப்பதற்காக தேசிய பட்டியல் ஆசனம் அந்த மாவட்டத்திற்கு வழங்கப்பட்டது. அதே போன்று இம்முறை மன்னார் மாவட்டத்திற்கு பிரதிநிதித்துவத்தை வழங்கியிருக்கலாம்.

தேசிய பட்டியல் விவகாரத்தில் தமிழ்க் கட்சிகள் மீண்டும் மீண்டும் பிழையான போக்கையே கையாண்டு வருகின்றன. 2020 தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர் செ.கஜேந்திரன் தேர்தலில் போட்டியிட்டு தோற்றிருந்தார். இருப்பினும் அவருக்கே தேசிய பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டிருந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான போக்கு அந்தந்த கட்சிகளுக்கு வாக்களித்த வாக்களர்களை ஏமாற்றும் அல்லது முட்டாள்கள் ஆக்கும் செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது.

The post தேசிய பட்டியல் ஆசனம் தோல்வியுற்ற சத்தியலிங்கத்திற்கு, மன்னார் புறக்கணிப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

தமிழரசுக் கட்சிக்கு 8 ஆசனங்கள்
வடக்கு கிழக்கின் பாரம்பரிய தமிழ் கட்சியான தமிழரசுக் கட்சிக்கு இம்முறை எட்டு ஆசனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. தனித்துப் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி எட்டு ஆசனங்களைப் பெற்றமை, அக்கட்சிக்கு ஒரு வகையில் வெற்றியே.

கட்சியின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தனின் மறைவிற்குப் பின்னர் சந்திக்கும் முதலாவது பொதுத் தேர்தல் இதுவாகும்.

கடந்த காலங்களில் டெலோ, புளொட் மற்றும் சிறிய கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து தேர்தலில் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி, இம்முறை சுமந்திரனின் தலையீட்டினால் தனித்து களம் இறங்கியது. சுமந்திரன் மீதான உட்கட்சி மற்றும் இதர கூட்டணிக் கட்சிகளின் அதிருப்தி, தேசிய மக்கள் சக்தியின் பாரிய எழுச்சி மற்றும் வைத்தியர் அர்ச்சுனாவின் சுயேட்சைக் குழுவின் அதிரடியான பிரச்சாரங்கள் என பல பக்கத்தாலும் பல சவால்களை யாழ் தேர்தல் களத்தில் எதிர்கொண்டது தமிழரசுக் கட்சி.

இம்முறை தேர்தலில், யாழ் தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி முதன் முறையாக இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதுடன், வன்னி தேர்தல் மாவட்டத்தில் மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. யாழ் தேர்தல் மாவட்டத்தில் தேசியக் கட்சி ஒன்று மூன்று ஆசனங்களைப் பெற்றமையும் இதுவே முதல்முறையாகும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழரசுக் கட்சி ஆதரவளித்த சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்டங்களில் போட்டியிடாமல் விட்டிருந்தால் தமிழரசுக் கட்சிக்கு மேலும் ஒன்று அல்லது இரண்டு ஆசனங்கள் கிடைத்திருக்கலாம்!! ஐக்கிய மக்கள் சக்தி யாழ் மாவட்டத்தில் 15,276 வாக்குகளைப் பெற்றிருந்தமையும் இங்கே சுட்டிக்காட்டப்படவேண்டும்.

தேர்தல் மாவட்டம்

வாக்குகள்

ஆசனம்

யாழ்ப்பாணம்

63,327

1

வன்னி

29,711

1

திருகோணமலை

34,168

1

மட்டக்களப்பு

96,975

3

அம்பாறை

33,632

1

தேசிய பட்டியல்

1

257,813

08

The post தமிழரசுக் கட்சிக்கு 8 ஆசனங்கள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

யாழ்ப்பானம் தேர்தல் மாவட்ட விருப்பு வாக்குகள் விபரம்
2024 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி நாடு முழுவதும் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

யாழ் தேர்தல் மாவட்டத்திலும் 80,830 வாக்குகளைப் பெற்று மூன்று ஆசனங்களை வென்றுள்ளது தேசிய மக்கள் சக்தி. பாரம்பரிய தமிழ் கட்சியான தமிழரசுக் கட்சி ஒரு ஆசனத்தையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு ஆசனத்தையும், வைத்தியர் அர்ச்சுனாவின் சுயேட்சைக் குழு ஒரு ஆசனத்தையும் வென்றுள்ளன.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இம்முறை தோல்வியடைந்துள்ளனர்.

இதேவேளை வைத்தியர் அர்ச்சுனாவுடன் இணைந்து போட்டியிட்ட சட்டத்தரணி கெளசல்யா 15,789 வாக்குகளைப் பெற்றிருந்தார். சுமந்திரன் (15,039 வாக்குகள்) மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (15,135 வாக்குகள்) ஆகியோர் பெற்ற வாக்குகளைக் காட்டிலும் கெளசல்யா பெற்ற வாக்குகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ் தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சிவஞானம் சிறீதரன் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். வெற்றி பெற்ற வேட்பாளர்களின்  முழுமையான விருப்பு வாக்குகள் விபரம் இதோ.

The post யாழ்ப்பானம் தேர்தல் மாவட்ட விருப்பு வாக்குகள் விபரம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

யாழ்ப்பாண தேர்தல் தொகுதியை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி
நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தின் யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி பெருவெற்றி பெற்றுள்ளது.

செல்லுபடியான 23,631 வாக்குகளில், 9,066 (41.46%) வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. தமிழரசுக் கட்சி 2,582 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.

The post யாழ்ப்பாண தேர்தல் தொகுதியை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஐக்கிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் போட்டியிடுவது சரியா?
சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான முருகேசு சந்திரகுமாரை முதன்மை வேட்பாளராக நிறுத்தி, தொலைபேசி சின்னத்தில் களம் இறங்குகின்றது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவிற்கு தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணி ஆதரவு வழங்கி, பிரச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தது. இதன் மூலம் சஜித் பிரேமதாசா யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவடங்களில் 121,177 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

தமிழரசுக் கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் இதர கட்சிகளின் ஆதரவுடன் (முன்னணி தவிர்த்து) சங்கு சின்னத்தில் போட்டியிட்ட பா.அரியநேத்திரன் 116,688 வாக்குகளைப் பெற்றிருந்தார். இது சஜித் பிரேமதாசாவை விட 4,489 வாக்குகள் மட்டுமே குறைவாகும்.

இவ்வாறானதொரு நிலையில் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணி யாழ் மாவட்டத்தில் போட்டியிடுவது மேலும் வாக்குகளைப் பிரிக்கும் ஒரு செயலாகவே பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு வழங்கிய தமிழரசுக் கட்சியின் வாக்கு வங்கியே இம்முறை பாரிய சரிவைச் சந்திக்கும் நிலையில் உள்ளது. மேலும் மற்றைய தமிழ்க் கட்சிகளின் வாக்குகளும் சரிவை சந்திக்கும் நிலையிலேயே உள்ளது.

அரசியல் நாகரீகம் கருதி, தமிழரசுக் கட்சி கொழும்பில் போட்டியிடுவதைத் தவிர்த்தது போன்று, ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணி யாழில் போட்டியிடுவதைத் தவிர்த்திருக்க வேண்டும். அல்லது சுமந்திரன் சஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அதனைத் தடுத்திருக்க வேண்டும்.

இன்னொரு கட்சியின் முடிவுகளில் சுமந்திரனை தலையிடும்படி எவரும் கேட்கவில்லை. தனது கட்சியிலுள்ள பலரது எதிர்ப்புகளையும் மீறி ஆதரவு கொடுக்கத் தெரிந்த சுமந்திரனுக்கு, தனது கட்சியின் வாக்கு வங்கிக்கே ஆப்பு வருகிறது என தெரியும்போது அதைத் தக்க வைக்க சஜித்துடன்  தீர்க்கமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கலாம் என்பதே எமது நிலைப்பாடு.

எமது தமிழ் அரசியல்வாதிகள் சேர்ந்தும் பயணிக்க மாட்டார்கள், எதிர்த்தும் அரசியல் செய்ய மாட்டார்கள். அதற்காண திராணி அற்றவர்களாகவே வடக்கு வாழ் தமிழ் அரசியல்வாதிகள் உள்ளனர் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சிறந்த உதாரணமாகும்.

என்னதான் நேர்மை நீதி என இவர்கள் சொன்னாலும், அவர்கள் செய்வது புனிதமான அரசியல் இல்லை என்பதை யாழ்  மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். யாழ் தேர்தல் மாவட்டத்தில் முஸ்லிம் மக்களின் வாக்குகள் உட்பட சில ஆயிரம் வாக்குகள் சஜித் அணிக்குக் கிடைக்கலாம்.

இந்த தேர்தல் கடந்த கால தேர்தல்கள் போன்றதல்ல. 396பேர் போட்டியிடும் தேர்தலில், கிடைக்கும் ஒவ்வொரு வாக்கும் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போகின்றது. எனவே மக்கள் தெளிவாக சிந்தித்து, தமது வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும்.

– மாற்றம் ஒன்றே மாறாதது –

The post ஐக்கிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் போட்டியிடுவது சரியா? appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அர்ச்சுனாவைக் கண்டு அஞ்சுவது யார்?
யாழ் மாவட்ட தேர்தல் களத்தில் பிரச்சாரப் பணிகள் கடும் வேகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. பழைய கட்சிகள்/அணிகள் (வீடு, சங்கு, மாம்பழம்) மெத்தனமாக இருக்கும்போது,  மற்றைய கட்சிகள், சுயேட்சை அணிகள் கடுமையாக பிரச்சாரப் பணிகளில் ஈடுபடுவதைக் காணக்கூடியதாக உள்ளது.

வடக்கு கிழக்கு தமிழர்களின் வாக்குகளை வைத்து பல காலமாக பழைய அரசியலை செய்து வரும் கட்சிகளுக்கு இம்முறை தேசிய மக்கள் கட்சி, சுயேட்சைக் குழுக்கள்(குறிப்பாக வைத்தியர் அர்ச்சுனா) என பல சவால்கள் களத்தில் காத்திருக்கின்றன.

பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அநுரவின் தேசிய மக்கள் சக்தி கட்சியின் மீதான வடக்கு மக்களின் ஆதரவை கடுமையாக விமர்சித்திருந்தார். வட பகுதியில் ஓரளவு கட்டுக்கோப்புடன் பயணித்துக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையே திசைகாட்டியின் மக்கள் ஆதரவு சற்று அசைத்துப் பார்த்துள்ளது என்பதற்கு இது ஒரு சான்றாகும் என்பதுடன், தமது வாக்குகள் உடையப் போவதை அவர் திறம்படக் கணித்து விட்டார் என்றே தோன்றுகின்றது.

தேசிய மக்கள் சக்தியின் எழுச்சிக்கு ஒப்பான ஒரு எழுச்சியை, வைத்தியர் அர்ச்சுனாவின் சுயேட்சை குழு 17 உம் வடபகுதியில் ஏற்படுத்தியுள்ளதோ என எண்ணத் தோன்றுகின்றது. தொடர்ச்சியான முகநூல் நேரடி காணொளிகள் மற்றும் பதிவுகள் மூலம் 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார் அர்ச்சுனா. பல உள்ளூர் YouTube தள இளைஞர்களும் அர்ச்சுனாவின் பிரச்சார பணிகளுக்கு பக்கபலமாக உள்ளனர். அர்ச்சுனாவும் இயன்றளவிற்கு அனைத்து உள்ளூர் YouTube தளங்களுக்கும் பேட்டியளித்து வருகின்றார். இவ்வாறானதொரு மக்களுடனான நெருங்கிய ஈடுபாட்டை எந்தவொரு அரசியல் கட்சிகளும் இதுவரை காட்டியதில்லை.

இந்த நிலையில் அண்மையில் தமிழ் மக்கள் கூட்டணியின் (மான் சின்னம்) வேட்பாளர் மிதிலைச் செல்வியுடன் ஏற்பட்ட சிறிய வாக்குவாதத்தினை அர்ச்சுனா முகநூல் காணொளியில் நேரடியாக ஒளிபரப்பியிருந்தார். அந்த நிகழ்வு தொடர்பாக அர்ச்சுனாவை பலர் கண்டித்திருந்த போதும், பலர் மிதிலைச் செல்வியையும் கண்டித்திருந்தனர். (இந்த நிகழ்வு தற்செயலான நிகழ்வா அல்லது வேண்டுமென்றே நடத்தப்பட்ட நிகழ்வா என உறுதிபடத் தெரியவில்லை)

“பெண்” என்ற கருத்தை முன்னிலைப்படுத்தி, அர்ச்சுனா ஒரு பெண்ணை அவமதித்து விட்டார் என்ற கோணத்திலும் ஊடக சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன. அவர்கள் சொல்வதைப் போல “பெண்” என்ற கருத்தை எடுத்தால், ஒரு பிரச்சனை இடம்பெறும் இடத்தில் ஏன் அந்த பெண்மணி அவ்வளவு நேரம்  இருந்த்தார்?, “துஷ்டரைக் கண்டால் தூர விலகு” என்பது போல, அந்த பெண்மணியும் விலகியிருக்க வேண்டுமல்லவா? போன்ற கேள்விகள் எழுகின்றன.

மிதிலைச் செல்வி தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளை உறுப்பினராக இருந்தவர். கொழும்பில் தமிழரசுக் கட்சி போட்டி போடுவதாக தெரிவித்து, கடைசி நேரத்தில் தவிர்த்திருந்தது. இதனால் விசனமடைந்த மிதிலைச் செல்வி யாழில் போட்டியிட விண்ணப்பித்திருந்தார். யாழ்ப்பாணத்தில் சுமந்திரனின் அணி தயார்படுத்தப்பட்டதால், மிதிலைச் செல்வியின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் மாவை சேனாதிராஜாவை நேரில் சென்று சந்தித்தும், சுமந்திரனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் எவ்வித பலனும் ஏற்படவில்லை.  எனவே இவர் உடனடியாகவே விக்னேஷ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியில் (மான் சின்னம்) ஐக்கியமானார். இவர் தாய்க் கட்சிக்கு உண்மையாக இருந்திருந்தால், தமிழரசுக் கட்சியிலிருந்து பிரிந்து மாம்பழ சின்னத்தில் போட்டியிடும் தவராசா அணியில் அல்லவா இடம்பெற்றிருக்க வேண்டும்??

மேலும், ஏற்கனவே அபலைப் பெண்ணிற்கு மதுபான நிலைய அனுமதிப் பத்திரம் (பார் லைசென்ஸ்) கொடுத்த விக்னேஷ்வரன் போன்று, மிதிலைச் செல்வியும் ஒரு கொழும்பு வரவு. கடந்த தேர்தல் போன்று இம்முறை தமக்கு வாக்குகள் கிடைக்கப் பெறாது என்பது மான் கட்சியினருக்கு நன்றாகத் தெரியும். இதனால் கொழும்பு ஸ்ரைலில் “பெண்ணியம்” பேசி வாக்குகள் சேர்க்க முடிந்தளவு முயற்ச்சி செய்கிறார்கள் போலுள்ளது.

மணிவண்ணன் மற்றும் பார்த்திபன் போன்றவர்களின் துரதிஷ்டமோ என்னவோ, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து பிரிந்து, இப்போ மானிடம் மாட்டி தமது வெற்றியை தாமே  கேள்விக்குறியாக்கியுள்ளனர். இவர்கள் சுயேட்சையாகக் போட்டியிட்டிருந்தால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாக இருந்திருக்கலாம்.

தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போன்றன தேசிய மக்கள் சக்திக்கு எதிராக மட்டுமே கருத்துக் கூறி வாக்குச் சேர்ப்பார்கள். ஆனால் மான் கட்சியினர் தேசிய மக்கள் சக்திக்கு எதிராகவும், அர்ச்சுனாவிற்கு எதிராகவும் கருத்துக் கூறி வாக்கு சேர்க்கப் பார்ப்பார்கள். இங்கே சிக்கல் என்னவெனில் தேசிய மக்கள் சக்தி சிங்கள தேசிய கட்சி என்றரீதியில் மக்கள் தவிர்த்தாலும், அர்ச்சுனாவை அவ்வாறு தவிர்க்க மாட்டார்கள். எனவே அர்ச்சுனாவிற்கெதிராக இவர்கள் எது செய்ய முற்பட்டாலும் அது அவர்களையே திருப்பத் தாக்கும் சந்தர்ப்பம் அதிகம் உண்டு என்பதை மான் கட்சியினர் புரிந்துகொண்டால் சரி.

The post அர்ச்சுனாவைக் கண்டு அஞ்சுவது யார்? appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

15,000 ஏக்கர் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்த சிங்கள அரசு
திருகோணமலையில் 1985 இற்குப் பின்னர் தமிழர்களது 15,000 ஏக்கர்களுக்கு மேற்பட்ட நிலங்களை சிங்கள அரசு ஆக்கிரமித்துள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.

வன இலாகா 4,000 ஏக்கர், தொல்பொருள் திணைக்களம் 2,600 இற்கும் மேற்பட்ட ஏக்கர், துறைமுக அதிகார சபை 5,000 இற்கும் மேற்பட்ட ஏக்கர், பெளத்த பிக்குகள் விகாரைகள் அமைக்க ஆயிரக் கணக்கான ஏக்கர்கள் என தமிழர்களது  15,000 ஏக்கர்களுக்கும் மேற்பட்ட நிலங்களை சிங்கள அரசு ஆக்கிரமித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனை மீட்க அதிக தமிழர் பிரதிநிதித்துவம் தேவை எனவும், எனவே 80 சதவீதத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் வாக்களித்தால் இரு தமிழ் பிரதிநிதிகளைப் பெறலாம் எனவும் குகதாசன் தெரிவித்துள்ளார்.

The post 15,000 ஏக்கர் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்த சிங்கள அரசு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

உண்மையான தமிழ்த்தேசியவாதி நானே – அங்கஜன் இராமநாதன்
வரும் பொதுத்தேர்தலில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் தபால்பெட்டி சின்னத்தில் போட்டியிடும் அங்கஜன் இராமநாதன், “நானே உண்மையான தமிழ்த்தேசியவாதி” என தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தங்களுக்குள் உட்பூசல்கள் செய்து நமது வாய்ப்புக்களை தாரை வார்த்துக்கொடுத்து, தமிழ் மக்களை கல்வியில் நலிவுறச் செய்து பொருளாதாரத்தில் வீழ்ச்சியடையச் செய்து  தமிழர்களை புலம்பெயர் தமிழராக்கி விட்டு, மக்களுக்கென்று எதுவும் செய்யாமல் இனியும் எதுவும் செய்வதற்கு எந்த திட்டமும் இல்லாமல் சக தமிழர்களை உணர்வுரீதியாகவே தாக்கி தம் சுயலாபத்திற்கு பயன்படுத்துபவர்களா உண்மையான தமிழ்த்தேசியவாதிகள்?

தமிழ் மக்களின் இருப்பைத் தக்கவைத்து, மக்களின் நலன்களைக் காக்கும், அவர்களை பொருளாதாரத்தில் வலுப்படுத்தும், கல்வியில் முன்னேற்றம் பெறச் செய்யும் முயற்சியில் ஒருங்கிணைந்து செயற்பட்டு, தமிழ் மக்களின் வாழ்க்கையை மேம்மடுத்துபவரா உண்மையான தமிழ்த்தேசியவாதி?

நான் என் தமிழ் மக்களின்  இருப்பை தக்கவைத்து, அவர்கள் தேவைகளை நிறைவேற்றி, அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்துவதை என் முழுநோக்காய் கொண்டு செயற்படுகிறேன். வெற்றுக்கூச்சலிடவில்லை. அதனால்தான் சொல்கிறேன், நான் தான் உண்மையான தமிழ்த்தேசியவாதி. என அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.

The post உண்மையான தமிழ்த்தேசியவாதி நானே – அங்கஜன் இராமநாதன்  appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

திசைகாட்டி வேட்பாளர்களும் தமிழர்களே
வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விருப்பு எண்கள் வழங்கப்பட்டுள்ளது. பிரச்சாரப் பணிகள் களைகட்டத் தொடங்கியுள்ளன.

தேசிய அரசியலில், சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (சின்னம் தொலைபேசி) மிக சுறுசுறுப்புடன் பிரச்சாரப் பணிகளை முன்னெடுத்துள்ளது. இதேவேளை ஜனாதிபதி அநுரவின் தேசிய மக்கள் சக்தியும் (சின்னம் திசைகாட்டி) மிகுந்த நம்பிக்கையோடும், எதிர்பார்ப்புடனும், எப்படியாவது மூன்றில் இரண்டு பெரும்பாண்மையைப் பெற்றிட வேண்டுமென்ற உற்சாகத்துடன் பிரச்சாரப் பணிகளை ஆரம்பித்துள்ளது.

ஆறு ஆசனங்களைக் கொண்ட யாழ் தேர்தல் மாவட்டத்தில், வழமைபோல் ஒற்றுமை இல்லாமலும், சுயநலத்துடனும் பல கட்சிகள், சுயேட்சை குழுக்கள் என பல திசைகளிலும் சிதறி, ஆகக் கூடியது 593,000 வாக்குகளை இலக்கு வைத்து, 396 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

தற்போது பாராளுமன்றில் யாழ் தேர்தல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஆசனங்களைக் கொண்டுள்ள இலங்கை தமிழரசுக் கட்சி (வீடு), தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (சைக்கிள்), EPDP, C.V.விக்னேஷ்வரன்  மற்றும் அங்கஜன் அணி போன்ற செல்வாக்கு மிக்க கட்சிகள் இம்முறை தேர்தலில் பாரிய சவால்ளை எதிர்கொள்ளப் போவதுடன், சில ஆசனங்களை இழக்கும் சந்தர்ப்பங்களும் உண்டு!

தேசிய மக்கள் சக்தி (சின்னம் திசைகாட்டி) மற்றும் வைத்தியர் அர்ச்சுனாவின் சுயேட்சைக் குழு 17 (சின்னம் ஊசி) போன்றவற்றிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு மெது மெதுவாக உயர்ந்து செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது.

தேசிய மக்கள் சக்தியினருக்கு(NPP) நாடு முழுவதும் எழுந்துள்ள மக்கள் ஆதரவு பிரதான தமிழ்க் கட்சிகளை பாரிய அளவில் கலங்க வைத்துள்ளதை மறுப்பதற்கில்லை.
தேசிய மக்கள் சக்தி ஒரு சிங்களப் போக்கு சக்தி எனவும்,
தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி ஒரு மாயை எனவும்,
அவர்களால் ஊழலை இல்லாமல் செய்ய முடிந்தாலும் தமிழருக்கான தீர்வினைத் தர முடியாது எனவும்,
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் தமிழினத்தின் கோடாரிக் காம்புகள் எனவும் கூறுமளவிற்கு தமிழ்க் கட்சிகள் கதிகலங்கிப் போய் உள்ளனர்.

சிங்கள மக்கள் 40,50 வருடங்களின் பின்னர், தமது எதிர்கால நலன் கருதி அரசியலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். அதாவது சிங்கள மக்கள் காலத்திற்கேற்ற வகையில் பொதுநலத்துடன் சிந்தித்து  வாக்களித்துள்ளார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்காவிற்கு வாக்களிக்கவில்லை. தமிழர்களை அநுரவிற்கு வாக்களிக்க விடாமல் திசை திருப்பிய பாரம்பரிய தமிழ்க் கட்சிகள், வடக்கு கிழக்கு தமிழர்களை ஒரு அடி மட்டத்தில் வைத்திருப்பதில் வெற்றி கண்டுள்ளார்கள்.

வடக்கு கிழக்கில் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிடுபவர்களும் தமிழர்களே என்பதை பாரம்பரிய தமிழ்க் கட்சிகள் உணரத் தயாராகவில்லை. இதற்கு அவர்களது ஈகோ ஒரு காரணமாக இருக்கலாம். அதிகம் செல்வாக்கு இல்லாத, படித்த, நேர்மையான, இளம் வேட்பாளர்களை அக்கட்சி இம்முறை தேர்தலில் நிறுத்தியுள்ளது. அவர்ளுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கிப் பார்ப்பதினால், தமிழர்கள் எதையுமே இழந்து விடப்போவதில்லை. (இருந்தால்தானே இழப்பதற்கு) மேலும் சந்தர்ப்பம் வழங்காமல் நாம் யாரையும் எடை போடவும் முடியாது.

கடந்த பல தேர்தல்களில், பாரம்பரிய தமிழ்க் கட்சிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இராணுவ தளபதி சரத் பொன்சேகா மற்றும் ஆட் கடத்தல், கப்பம் பெற்றவர்கள் என பல முன்னாள் ஆயுதக் குழுக்களுக்கு தமிழர்கள் வாக்களித்த சந்தர்ப்பங்களும் உண்டு. இவற்றின் அடிப்படையில் போலித் தமிழ்த் தேசியம், தமிழருக்கான தீர்வு போன்ற மயக்கும் வாசகங்களுடன் வரும் வேட்பாளர்களைப் புறக்கணித்து, தமிழ் மக்கள் வரும் தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

– உங்கள் வாக்கு உங்கள் பலம் –

The post திசைகாட்டி வேட்பாளர்களும் தமிழர்களே appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.